Friday, 26 April 2013

செக்ஸ் தூண்டலுக்கு உதவும் உணவுகள்..!




                           பெண்களுக்கு பல பொறுப்புகள் உள்ளன. குடும்ப பராமரிப்பு, மகப்பேறு, குழந்தைகளை வளர்த்தல் முதலியன. ஆனால் ஆண்களுக்கு உள்ள பெரும் பொறுப்பு பாலியல் உறவில் மனைவியை மகிழ்விப்பது! அதில் சிறிய குறைபாடு இருந்தால் கூட ஆண்கள் மனமுடைந்து போகின்றனர். எனவே தான் ஆதி காலத்திலிருந்து பாலுணர்வை தூண்டி உடலுறவை மேம்படுத்தும் உணவு, மருந்துகளை ஆண்கள் அதிகமாக நாடுகின்றனர். தங்கபஸ்பம், சிட்டுக்குருவி லேஹியம் முதலியன ஆணுக்கான “ரகசிய” மருந்துகளாக இருந்தன.


                           கஜுராஹோவையும், காம சூத்திரத்தையும் உலகுக்கு அளித்த நம் தேசத்தில் 30 கோடி ஜனங்கள் பாலியல் குறைபாடுகளுடன் வாழ்கின்றனர். புராதன இந்திய சமையல் குறிப்புகளில், காதலை தூண்டும் உணவுக் கலவையாக கருமிளகு, தேன், மிளகாய் முதலியன கூறப்படுகின்றன.

                           சோம்பு சமையலிலும் பயன்படுகிறது. மையலிலும் பயனாகிறது! இதன் விதைகளை உறிஞ்சி உண்டால் ஆசை அதிகமாகும்.
அஸ்பாரகஸ் சுவைவயுள்ள தோட்டக் கீரை.
பாதாம் பருப்பு தொன்று தொட்டு ஆண்மையையும், மக்களைப் பெற சக்தி அளிக்கும் உணவாக கருதப்படுகிறது.
வாழைப்பழம் வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியமும் ‘பி’ விட்டமின்களும் செக்ஸ் ஹார்மோனை தயாரிக்கத் தேவை. எனவே வாழைப்பழம் ஒரு ஆண்மையை பெருக்கும் முக்கியமான பழம்.
துளசி உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது துளசி. ஆண்களின் உடலுறவு ஆர்வத்தை தூண்டுகிறது.
சாக்லேட் சாக்லேட்டில் தியோப்ரோமைன் இந்தப் பொருள் வேட்கையை பெருக்கும். தவிர சாக்லேட் ஒரு ஆன்டி ஆக்சிடான்ட்.
காய்கறிகள் பூமிக்கு அடியில் விளையும் கிழங்குகள், பூமியின் சக்தியை உறிஞ்சி, அதை நமக்களிக்கும். கேரட், முள்ளங்கி போன்றவை ஆண்மையை பெருக்கவல்லவை 
                  தக்காளியும் சிறந்த பாலுணர்வு ஊக்கி. ஃப்ரான்ஸில் இதை ‘காதல் ஆப்பிள்’ என்பார்கள். வெங்காயமும் தொன்றுதொற்று இந்தியாவில், எகிப்தில், அரேபியாவில் ஆண்மை ஊக்கியாக பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறியாகும். அதுவும் வெள்ளை வெங்காயம் சிறந்தது. வெள்ளை வெங்காயத்தை நெய்யில் வதக்கி உண்ண வேண்டும். “ஆனியன் சூப்” புத்துணர்ச்சி ஊட்டும். இவை தவிர குடமிளகாய், இஞ்சி, செலரி, வெள்ளரி, தனியா இவைகளும் உதவும். பிரசித்தி பெற்ற ‘அரேபிய இரவுகள்’ கதையில் ஒரு வியாபாரி 40 வருடங்களாக குழந்தையில்லாமல் இருந்து கொத்தமல்லி இலைகள் அடங்கிய மருந்தை உண்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக வருகிறது.
                
பழங்கள் பப்பாளி, வாழைப்பழம், மாம்பழம், கொய்யாபழம் இவைகளும் சிறந்த இளமை காக்கும் பழங்கள். கொய்யாப்பழம் பெண்களின் ஜனனேந்திரிய உறுப்புக்களின் தசைகளை வலுப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள ஒரு வேதிப்பொருள் செக்ஸ் உணர்வை அதிகரிக்கும்.
               
பால் சார்ந்த உணவுகள் பால் அதுவும் எருமைப்பால், தயிர்(பகலில்) மோர், வெண்ணை, நெய் இவை இல்லாமல் இந்திய உணவுகள் இல்லை. இவையெல்லாம் உடலுறவுக்கு வலிமை ஊட்டும் உணவுகள்.
               
மாமிசங்கள், மீன் மாமிச வகைகளில் நீர் வாழ் பிராணிகளின் மாமிசம் உண்பது நல்லது. கடல் மீன்களை விட நதிமீன்கள் பாலியல் உணர்வை தூண்டுபவை. கடல் முத்துசிப்பி, சிறந்த ஆண்மை பெருக்கியாக கருதப்படுகிறது.

              
உணவுகள் காதல் செயல்பாடுகளை தூண்டுமா என்ற கேள்விக்கு விஞ்ஞானத்தில் பதில் ‘ஆமாம்’! அந்தந்த ஊருக்கு ஏற்றபடி காதல் உணவுகள் மாறுகின்றன. ஒட்டகத்தின் திமில் அரேபியர்களுக்கும் குங்குமப்பூ ஸ்பெயின் நாட்டவர்களுக்கும், கோகோ அஸ்டெக் இனத்தவருக்கும், பறவைக்கூடு சூப் சீனர்களுக்கும் முறையே ஆண்மைக்குறைவுக்கு மருத்துவ உணவாக கருதப்படுகின்றன.சில பிரசித்தி பெற்ற உணவுகள்
ஆயுர்வேதத்தின் படி கோதுமை அரிசி, உளுத்தம் பருப்பு இவை ஆண்மையை ஊக்குவிக்கும், விந்துவின் தரத்தை உயர்த்தும்.

No comments:

Post a Comment