Wednesday, 18 September 2013

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே! 

பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது.அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது. மேலும் சில தகவல்கள்
 1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது.
 2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும்.
 3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.
 4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.
 5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.
 6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.
 7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
 8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.
 9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும், எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது. 

யார் யார் இதை தவிர்கனும்:
 10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்

மல்லிகை மகத்துவம்

                               சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும். புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
                         மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும். பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு நீங்கம்.

மஞ்சள்

                              இயற்கையை மீறி எதுவும் நடக்காது’; `எது நடந்தால் என்ன பார்த்துக் கொள்ளலாம்’ -இவையெல்லாம் கிராமங்களில், நாட்டுப்புறங்களில் பேசப்படும் வழக்கு மொழிகள். *விடாமல் அடிக்கடி இருமிக் கொண்டிருப்பவர்களும், நெஞ்சில் சளி உறைந்திருப்பவர்களும் குறைந்தது ஒரு வாரத்திற்கு இரவில் ஒரு டம்ளர் பாலில் ஒரு சிட்டிகை அளவுக்கு மஞ்சள் தூள், மிளகுத்தூளை சேர்த்து அருந்தி வரவேண்டும். நான்கைந்து நாளிலேயே சளி, இருமல் பறந்தோடி விடும். *இந்த வைத்தியத்தைத்தான் இன்றளவும் கிராமங்களில் பலர் கடைபிடிக்கிறார்கள்.
                          மிளகையும், மஞ்சளையும் சமையலில் அன்றாடம் நாம் சேர்த்துக் கொள்வதற்குக் காரணம் அவற்றின் மருத்துவ குணங்களால் தான். *பொதுவாக மஞ்சள் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இது உடலில் உட்புகும் நோய்க்கிருமிகளை அழித்தொழிக்கும் ஆற்றல் பெற்றது.அதேபோல மிளகுக்கும் அதீத மருத்துவ சக்தி உள்ளது. உடலில் உருவாகும் வாய்வுத் தொந்தரவுகளை அறவே நீக்குகிறது. சளியை விரட்டும் சக்தி மிளகுக்கு உள்ளது .*மிளகின் காரமும், மஞ்சளின் நோய் எதிர்ப்பு சக்தியும் ஒருங்கே உடலில் சேரும்போது, இருமலாவது, சளியாவது, போயே போயிடும்.

கொடம்புளி

                                  உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம். பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர்.
                                இதற்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது. உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது. உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும்.
                               அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள். கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது.
                               Tamil : Kodumpuli Sanskrit : Vrikshamla English : Brindel berry Telugu : Sima chinta Malayalam : Kodumpuli இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது. உடல் பருமன் குறைய உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது. உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது. இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன. 
                                             பசியை அடக்கும் கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும். மலச்சிக்கல் தீர புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும். மூட்டுவலி நீங்க கொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும். இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.
                                   நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம். உடல் எடை குறைய – கொழுப்பை எரிக்கும் கொடம்புளி! பத்தே நாளில் பத்து கிலோ எடை குறையுமா ?.. பத்தே நாட்களில் பத்து கிலோ எடை குறையுமா ?…. குறையும் . ஆனால் பத்து நாட்களில் கண்டிப்பாக குறையும் என்று உறுதி சொல்ல முடியாது! ஒரு சிலருக்கு நாட்பது நாட்கள் ஆகிவிடலாம்..
முறையாக கீழே கொடுத்துள்ள விசயங்களை சரியாகச் செய்தால் – வெற்றி நிச்சயம்!

1.கொடம்புளி சூப்- காலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். கொடம்புளி சூப் எப்படி செய்யணும்? கொடம்புளி ஐம்பது கிராம் – முன்னூறு மிலி வெந்நீரில் இரவிலேயே ஊற வைத்து விடணும். கொள்ளு (கருப்பு காணம்) இருபது கிராம் + நூறு கிராம் வெந்நீரில் ஊற வைத்து விடணும் . காலையில் இந்த நானூறு மிலி-யையும் கொதிக்க வைத்து நூறு மிலியாக வற்ற வைத்து எடுத்து வைக்கணும். இந்த நூறு மிலியாக வற்றவைத்து – வடிகட்டிய சூப்பில் சிறிது பொடி செய்து வைத்துள்ள வாய்விடங்கம்,சுக்கு,மரமஞ்சள் -இவைகளையும் தேன் ஐந்து மிலியும் கலந்து வெறும் வயிற்றில் பருகவும்.

 2 .குளிர் பானங்களை குடிக்கவே குடிக்கக் கூடாது

3 .உணவிற்கும் படுக்கைக்கும் குறைந்தது  3 மணி நேரமாவது இடைவேளை விடணும். பகலில் தூங்கக் கூடாது .

4 .அரிசி சார்ந்த உணவுகளை முடிந்த அளவு நிறுத்தணும்.

5 .வாரம் ஒரு முறையாவது வெறும் பழங்களை மட்டும் சாப்பிட்டு நோன்பு இருக்கணும்.

6 .வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது

 8 சைவ உணவிற்கு முடிந்தால் மாறிடணும். அசைவம் பொரிக்காத மீன் வேண்டுமானால் சாபிடலாம்.

 9 .எண்ணையில் பொறித்த உணவுகளை , சைனீஸ் உணவுகளையும் நிறுத்தணும்.
10 . டிவி பார்த்து கொண்டே சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது பேச கூடாது. மந்திரத்தில் மாங்காய் காய்க்காது .
உடல் பயிற்சிகள் -யோகாசனங்கள் போன்றவற்றையும் செய்ய வேண்டும். முறையாக கடைபிடித்தால் எளிதில் விரைவில் உடலில் உள்ள கொழுப்பை குறைக்கலாம். தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும் சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே, இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.

மூலிகை நீர்



ஆவாரம்பூ நீர் “ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

  கரிசாலை நீர் சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை நீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ  நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

  செம்பருத்தி நீர் செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

  நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

  துளசி நீர் குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர் யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை  நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி நீர் தயாரிப்பது போல் வல்லாரை  நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை  நீராகும்.இந்த நீரை குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்."

சுவையும் பயனும்

காரம்: உடலுக்கு உஷ்ணத்தைக் கூட்டுவதுடன் உணர்ச்சிகளை கூட்டவும்,குறைக்கவும் செய்யும்.
 கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.

 கசப்பு: உடம்பிலுள்ள உதவாத கிருமிகளை அழித்து உடம்பிற்கு சக்திகூட்டும். சளியைக்கட்டுப்படுத்தும்.
 கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவைமிகுதியாய் உள்ளது.

 இனிப்பு: உடம்பு தசையை வளர்க்கும் தன்மை வாய்ந்தது. வாதத்தைக் கூட்டும்.
 கிடைக்கும் உணவுப் பொருட்கள்: பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.

 புளிப்பு: இரத்தக் குழாயின் அழுக்கை நீக்கவல்லது. வாதத்தைக்கூட்டும். 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.

 துவர்ப்பு: இரத்தம் வெளியேறாது தடுக்க வல்லது. இரத்தம் உறைவதை கூட்டும் தன்மையுள்ளது.
 கிடைக்கும் உணவுப் பொருட்கள்: வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.

 உப்பு: ஞாபகசக்தியை கூட்டும். கூடினால் உடம்பில் வீக்கத்தை ஏற்படுத்தும் 

கிடைக்கும் உணவுப் பொருட்கள்: கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

ஆண்மைக்கு

இன்றைய காலத்தில் நிறைய பேருக்கு கருவுறுதலில் பிரச்சனை இருக்கிறது இத்தகைய பிரச்சனை வருவதற்கு காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் தான் காரணம். மேலும் கருவுறுதல் பிரச்சனை பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களு தான் இருக்கும். எனவே இந்த மாதிரி பிரச்சனை என்றதும் பெண்கள் மட்டும் நல்ல சரியான உணவுகளை உண்டால் மட்டும் போதாது, ஆண்களும் தான் ஒரு சில உணவுகள் மற்றும் செயல்களை மேற்கொள்ள வேண்டும். பொதுவாக இந்த மாதிரியான பிரச்சனை வந்தால், அனைவரும் உடனே மருத்துவரிடம் சென்று அதற்கான தீர்வை சரிசெய்ய முயல்வார்கள். ஆனால் அவ்வாறு சென்று என்ன தான் சிகிச்சை மேற்கொண்டாலும், ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில் உணவுகள் மூலமும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். குழந்தை பெற நினைப்பவர்கள். சிகரெட் பிடிப்பவராக இருந்தால், உடனே நிறுத்திவிட வேண்டும். ஏனெனில் அவையும் குழந்தை பிறப்பிற்கு தடையை ஏற்படுத்தும். இப்போது எந்த உணவுகளை ஆண்கள் சாப்பிட்டால், அவர்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம் என்று பார்ப்போமா!!! 1. பூண்டு இந்த உணவு ஆண் மற்றும் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின் பி6 இருப்பதால், இது இருபாலரும் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவதற்கான உணர்வை அதிகரித்து, கருவுறுதலுக்கு வழிவகுக்கும். 2. மாதுளை இந்த சுவையான சிவப்பு நிற பழத்தை சாப்பிட்டால், ஆண்களின் விந்தணு அதிகரிப்பதோடு, அதன் சக்தியும் அதிகமாக இருக்கும். 3. வாழைப்பழம் வாழைப்பழத்தில் விந்தணுவின் அளவையும், சக்தியையும் அதிகரிக்கும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் புரோட்டீன்கள் உள்ளன. அதுமட்டுமின்றி, இதில் ப்ரோமெலைன் என்னும் நொதிப்பொருள் இருப்பதால், அவை உடலில் உள்ள உறவில் ஈடுபடுவதற்கான உணர்ச்சியை அதிகரிக்கும். 4.பசலைக் கீரை பசலைக் கீரையில் ஃபோலிக் ஆசிட் அதிகம் இருக்கிறது. இது விந்தணுவின் உற்பத்தியை அதிகரித்து விந்தணுவில் உள்ள டி.என்.ஏ -வைப் பாதுகாக்கிறது. அதுமட்டுமின்றி, இந்த உணவில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து உள்ளது. எனவே தான், பசலைக் கீரை ஆண்களின் ஆண்மைத்தன்மையை அதிகரிக்க உதவுகிறது. 5. மிளகாய் மிளகாய் என்றதும் நம்பமுடியாது. ஆனால் உண்மையில் மிளகாய் விந்தணுவை அதிகரிக்க உதவும் உணவுப் பொருட்களுள் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால், இவை எண்டோர்பின்கள் என்னும் ஒருவித சந்தோஷம்ன உணர்வைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை விடுவிக்கும். இதனால் உடல்தளர்வடைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் சி, பி, ஏ மற்றும் ஈ சத்துக்களும் உள்ளன. 6. தக்காளி இது பொதுவாக சமையலில் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் ஒன்று. இந்த உணவுப் பொருளில் விந்தணுவை ஆரோக்கியமாக்கவும், அதிகரிக்க செய்யும் கரோட்டினாய்டு லைகோபைன் உள்ளது. அதிலும இதனை பருப்புகளுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லையெனில் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ் குடிக்கலாம். இதனால் இயற்கையாகவே விந்தணுவின் அளவானது அதிகரிக்கும். 7. தர்பூசணி தர்பூசணிப் பழத்தில் லைசோபைன் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், விந்தணு அதிகரிப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கும். 8. வைட்டமின் சி உணவுகள் வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதாலும், ஆண்கள் தங்களது விந்தணுவின் அளவை அதிகரிக்கலாம். அதற்கு வைட்டமின் சி நிறைந்துள்ள உணவுகளான சிட்ரஸ் பழங்கள் சரியானதாக இருக்கும். 9. ஆப்பிள் பழங்களில் அனைவரும் விரும்பி சாப்பிடும் பழங்களில் ஆப்பிள் முதன்மையானது. அத்தகைய பழத்தை பெண்களை விட ஆண்கள் அதிகம் சாப்பிட்டால், விந்தணுவின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் ஆப்பிள் சீடர் வினிகரை சாப்பிட்டால், நம்பமுடியாத அளவில் தீர்வு கிடைக்கும். 10. முந்திரி ஸ்நாக்ஸில் சிறந்த உணவுப் பொருள் ஸ்நாக்ஸ் தான். அத்தகைய நட்ஸில் முந்திரிப் பருப்பு மிகவும் சுவையுடன் இருக்கும். எனவே இதனை ஆண்கள் மற்றும் பெண்கள் அவ்வப்போது ஸ்நாக்ஸாக சாப்பிட்டால், இதில் அதிகமாக இருக்கும் ஜிங்க் சத்து, கருவுறுதல் தன்மையை அதிகரிக்கும.

ஆயுர் வேத அழகு குறிப்புக்கள்!

* தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தாள் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். • ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும். • முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும். • நகங்களை வெட்டும் முன் எண்ணெயை தடவிவிட்டு, சிறிது நேரம் கழித்து நகத்தை வெட்டினால், விரும்பும் வடிவத்திலும், அழகாகவும் வெட்ட இயலும். • கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும். • வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் வோடிக்குரு வராமல், வெளியில் கறுத்துப் போகாமல் இருக்கும். • இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். • கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும். தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும். • இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன் பயிற்றம்பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க முகம் சுத்தமாகும். பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும். • முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

ஆறு சுவை உணவின் அற்புத பலன்கள்

பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது. இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் சற்று விரிவாய் பார்க்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர். இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன. துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது இனிப்பு - தசையை வளர்க்கின்றது புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள். துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது. உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.

இஞ்சியின் மருத்துவ குணங்கள்! 

சுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம் எனும் கூட்டு மருந்தாகும். சுக்கு, மிளகு, திப்பிலி என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கிறது ஜலதோஷம் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கிறது; தலைவலியைப் போக்குகிறது இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது; கொழுப்புச்சத்தைக் குறைக்கிறது மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. மகளீரின் கருப்பை வலிக்கும், மாதவிலக்கு நேரங்களில் அடிவயிற்றில் உண்டாகும் வலிகளுக்கும் நன்மருந்தாக உள்ளது. தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும். இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர பேருதவி புரிகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது. பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது. பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவக் குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் செரித்தலை துரிதப்படுத்துதல் ஆகும். இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். இஞ்சியை நன்றாக சுட்டு, அதை நசுக்கி உடம்பில் தேய்க்க பித்த, கப நோய்கள் தீரும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். ஆக மூன்று தோஷத்தையும் நீக்கும் ஆற்றல் இஞ்சிக்கு உண்டு. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். இஞ்சி சாறோடு, தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர தொப்பை எனும் பெருவயிறு கரைந்து விடும். இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர நீரிழிவு குறையும்.

இயற்கை மருத்துவம:- வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு

வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு---இயற்கை மருத்துவம:- வெள்ளைப்படுதல், ரத்தப்போக்கு 1. தினமும் அன்னாசிப்பழம் சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் நீங்கும். கர்ப்பிணிகள் சாப்பிடக் கூடாது. 2. பப்பாளிக் காயை இடித்து சாறு எடுத்து. ஒரு அவுன்ஸ் சாப்பிட்டால், மாதவிலக்கு சமயங்களில் வலி குறையும். 3. பச்சை வாழைக்காயை இடித்து, வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் மாதவிலக்கு கால ரத்தப்போக்கு கட்டுப்படும். 4. நல்லெண்ணெயுடன், முட்டையை கலந்து குடித்தால், மாதவிலக்கு பிரச்சினைகள் தீரும். 5. புளியம்பழத்தோல், முருங்கைக்காய், சுக்கு மூன்றையும் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால், மாதவிலக்கு குளறுபடிகள் இருக்காது! 6. மாம்பழக் கொட்டையை காயவைத்து பொடியாக்கி, தேன் கலந்து சாப்பிட்டால் மாதவிலக்கு ரத்தப்போக்கு குறையும். 7. கொள்ளுவின் அவித்த நீரை குடிப்பது மாதவிலக்கு காலத்துக்கு ஆரோக்கியம். 8. புளி, மஞ்சள், மல்லி மூன்றையும் சேர்த்து அரைத்து, சாப்பிட்டால் மாதவிலக்கு பிரச்சினைகள் ஓரளவு கட்டுப்படும். 9. வேப்பமரப் பட்டை- பூ- வேர்- காய்- பழம் அனைத்தையும் அரைத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், கர்ப்பமாகும் சக்தி அதிகரிக்கும்! 10. பேரீச்சம்பழம், கொத்தமல்லி இலை இரண்டையும் அரைத்து, பசும்பாலுடன் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் கர்ப்பம் தரிக்கும்! 11. உளுத்தம் பருப்பை நெய்யில் வறுத்து, பொடியாக்கி, பாலில் கொதிக்க வைத்து, அதனுடன் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் உயிரணு உற்பத்தி அதிகரிக்கும். 13. தாய்ப்பால் நன்றாகச் சுரக்க : 1. பப்பாளிப் பழத்தைத் தேனில் தொட்டு உண்டால் தாய்ப்பால் நன்றாகச் சுரக்கும். இதைத் தாய்ப்பால் கொடுப்பவர்கள் தினமும் உண்ணலாம். 2. குழந்தை பெற்ற தாய்மார்கள் தினம் சிறிது ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டுவர பால் அதிகம் சுரக்கும். குழந்தையும் கொழு கொழுவென ஆகும்.

இளம் நரை

காலத்தில் சுத்தமான நீர் இல்லாததாலும், இயற்கை முறையில் தலைக்குக் குளிக்காமல், இரசாயனக் கலப்பு நிறைந்த ஷாம்பு, சோப்பு போன்றவற்றால் குளிப்பதாலும் இளம் வயதிலேயே தலை முடி கொட்டி விடுகிறது. முடி என்னமோ எளிதாகக் கொட்டிவிடுகிறது. ஆனால், அதனை மீண்டும் முளைக்க வைக்கவோ, மேலும் முடி கொட்டாமல் காப்பாற்றுவதோ இன்றைய மருத்துவத்தில் பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில், முடி உதிர்வதைத் தடுக்கவும், இள நரையை தவிர்ப்பதும் எப்படி என்பது குறித்து இயற்கை மருத்துவம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம். வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்­ணீரில் போட்டு கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக்கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில் ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் தடுக்கலாம். சிலருக்கு சிறு வயதிலேயே இளநரை தோன்றும். இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். சிலருக்கு முழுவதும் நரையாகிவிடும். இவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், தாமரைப் பூ கஷாயம் வைத்து தொடர்ந்து காலை, மாலை என குடித்து வரவேண்டும். முளைக்கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் நரை படிப்படியாகக் குறையும். சரி, முடி உதிர்வதைப் பார்த்தோம், நரை போக்க வழி பார்த்தோம். முடி வளர வழி இருக்கிறதா? ஆம் அதுவும் இருக்கிறது நம் இயற்கை மருத்துவத்தில். கறிவேப்பிலையை நன்கு அரைத்து தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி வளரும். இல்லையென்றால், கேரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தலையில் தேய்த்து வந்தாலும் முடி வளரும். இவையனைத்திற்கும் மேலாக, சுத்தமாக முடி இல்லாமல் வழுக்கையாக இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பு. கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தலையில் தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை மறையும்.

இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கான இயற்கை வழி

இன்சுலின் என்பது கணையத்தில் சுரக்கப்படும் ஒரு ஹார்மோன். இந்த ஹார்மோன் தான் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆனால் இந்த இன்சுலினானது குறைய ஆரம்பித்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து, நீரிழிவு நோயை ஏற்படுத்திவிடும். ஆகவே உடலில் நீரிழிவு நோயானது தாக்காமல் இருக்க வேண்டுமெனில், இன்சுலினின் அளவை சீராக பராமரிக்க வேண்டும். பொதுவாக இது எளிதான காரியம் அல்ல. இது மிகவும் கடினமானது. ஆனால் சரியான வாழ்க்கை முறை, உணவுகள் போன்றவற்றை மேற்கொண்டு வந்தால், நிச்சயம் இன்சுலினை சீராக வைத்துக் கொள்ளலாம். அதிலும் ஏற்கனவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவும், கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். இவ்வாறு கவனமாக இல்லாவிட்டால், நீரிழிவு நோயானது முற்றிவிடும். சரி, இப்போது அந்த இன்சுலின் அளவை சீராக வைப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய சில செயல்களைப் பார்ப்போம். சரியான எடை உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருந்தால், இன்சுலின் உற்பத்தியில் குறைபாடு ஏற்படும். எனவே உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்கு சரியான உடற்பயிற்சி மற்றும் டயட்டை மேற்கொள்ள வேண்டும். சுறுசுறுப்பான நடை போதிய உடற்பயிற்சியானது இல்லாவிட்டாலும், இன்சுலின் குறைபாடு ஏற்படும். எனவே, தினமும் 30 நிமிடம் சுறுசுறுப்பான நடையை மேற்கொண்டால், இன்சுலினானது சரியாக சுரக்கப்பட்டு, உடல் முழுவதும் சீராக செல்லும். பூசணிக்காய் பூசணிக்காய் இனிப்பான உணவுப் பொருளாக இருந்தாலும், இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளது. மேலும் பூசணிக்காயில் உள்ள ஒருசில நொதிகள் இன்சுலின் சுரப்பை சீராக வைத்துக் கொள்ளும் ஸ்டார்ச் உணவுகளை தவிர்க்கவும் ஏற்கனவே நீரிழிவு பிரச்சனை இருப்பவர்கள், ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும். குறிப்பாக சாதத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக நார்ச்சத்து அதிகம் நிறைந்த தினை, கம்பு போன்ற உணவுகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம். கொழுப்பு நிறைந்த ஈரல் தற்போதுள்ள இளம் தலைமுறையினர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் கொழுப்பு நிறைந்த கல்லீரல் பிரச்சனை. இந்த பிரச்சனையில் கொழுப்புக்களானது கல்லீரலில் அதிகம் தங்கி, கிளைகோஜன் பயன்படுத்தப்படாமல் அதிகப்படியாக சேகரிக்கப்பட்டிருக்கும். இதனால் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. எனவே கல்லீரலை நன்கு ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்துள்ள உணவுகள் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதனை சாப்பிட்டால், அடிக்கடி பசி ஏற்படாமல் இருப்பதோடு, உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் குறையும். எனவே ப்ராக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளை அதிகம் சேர்ப்பது நல்லது. குறைந்த கிளைசீமிக் உள்ள உணவுகள் உண்ணும் உணவுகளில் சர்க்கரையின் அளவு மட்டும் குறைவாக இருந்தால் போதாது. அதில் உள்ள கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவாக இருக்க வேண்டும். பட்டை பட்டையை உணவில் அதிகம் சேர்த்தால், இன்சுலின் குறைபாட்டை போக்கி, நீரிழிவு நோயை தடுக்கலாம். அதற்கு தினமும் காலையில் காபி குடிக்கும் போது, அதில் சர்க்கரைக்கு பதிலாக சிறிது பட்டையை பொடி செய்து போட்டு குடிப்பது மிகவும் நல்லது. குரோமியம் குறைபாடு உடலில் குரோமியம் என்னும் கனிமச்சத்து குறைவாக இருந்தாலும், இன்சுலின் சுரப்பில் தடை ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே குரோமியம் அதிகம் உள்ள உணவான கடல் சிப்பியை அதிகம் உட்கொள்வது சிறந்தது. வைட்டமின் கே உணவுகள் எளிதில் கரையக்கூடிய கொழுப்பு தான் வைட்டமின் கே. இந்த வைட்டமின் கே உள்ள உணவுப் பொருட்களையோ அல்லது மருந்துகளையோ சாப்பிட்டால், இன்சுலின் குறைபாட்டை தவிர்க்கலாம். அதிலும், பச்சை இலை காய்கறிகளான பசலைக்கீரை, வெந்தயக் கீரை போன்றவற்றில் வைட்டமின் கே அதிகம் உள்ளது. வெண்டைக்காய் இரவில் படுக்கும் போது வெண்டைக்காயை நீரில் நறுக்கி போட்டு, காலையில் எழுந்து அந்த நீரைப் பருகினால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதோடு, இன்சுலின் குறைபாடும் நீங்கும்.

வீட்டு உணவுப் பொருட்களின் மருத்துவ குணங்கள் :-

மருத்துவ குணங்கள் உண்டு. அதை அறியாமல், அந்தப் பொருட்களின் மருத்துவ குணங்கள் தெரியாமல் கிடைக்கும்போது மட்டுமே பயன்படுத்துகிறோம். அதைத் தேடிப்போவதை நாம் விரும்புவதில்லை. அதற்கு நமது அவசரக் காலம் ஒரு காரணமாகிறது. சில நோய்களை உணவாலேயே சரிப்படுத்திவிட முடியும். இவற்றைப் பயன்படுத்தி ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம். .•வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடற்சூடு கட்டுப்படுத்தப்படுகிறது. வறட்டு இருமலுக்கு மிகவும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வெண்டைக்காயில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். •சிறிய வெங்காயம் நான்கு எடுத்து, அவற்றின் தோலை உரித்துவிட்டு, நன்கு மென்று சாப்பிட்டுவிட்டு, சூடாக ஒரு தம்ளர் வெந்நீர் குடித்தால் எத்தகைய ஜலதோஷமும் நீங்கிவிடும். • பொன்னாங்கண்ணிக் கீரையைப் பூண்டு போட்டு வேகவைத்து, கடைந்து சாப்பாட்டுடன் சாப்பிட்டு வந்தால், மூலநோயால் அவதிப்படுபவர்கள் நோய் நீங்கிக் குணமடைவார்கள். •புதினா இலையினை அரைத்துச் சாறெடுத்து இரவில் படுக்கப்போகுமுன் முகத்தில் தேய்த்து, காலையில் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். வேறு எந்தக் கிறீமோ, லோஷனோ முகத்திற்குத் தேவையில்லை. பருக்களும் முகத்தில் ஏற்படாது. •நீரில் உப்பை கலந்த தண்ணீரினால் குழந்தைகளைக் குளிப்பாட்டினால் எந்தவிதமான தோல்வியாதியும் குழந்தைகளை நெருங்காது. •பச்சை வெங்காயத்தை அரிந்து தயிரில் போட்டு இரவு படுக்கப்போகுமுன் சாப்பிட்டால் நிம்மதியான உறக்கம் வரும். •அன்னாசிப்பழத்தை அடிக்கடி சாப்பிட்டால், உடலில் ஏற்படும் வலிகளும் மற்றும் கை, கால்களில் ஏற்படும் மூட்டுவலியும் நீங்கிவிடும். •இரண்டு வெற்றிலையுடன், இரண்டு கிராம்பு, ஒரு துண்டு சுக்கு வைத்து பால் தெளித்து நைஸாக அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் கடுமையான தலைவலி நீங்கும். •அறுகம்புல் சாற்றை அடிக்கடி பருகி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். வயிற்றுப்புண், குடல்புண் குணமாகும். •சிறு குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வேப்பங்கொழுந்தை உப்பு சேர்த்து அரைத்து உண்ணக் கொடுத்தால் வயிற்றில் பூச்சித் தொல்லை இராது. •இரவில் தூங்காமல் தொந்தரவு செய்யும் குழந்தைகளுக்குப் படுக்கப் போகுமுன் அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் தேன் கொடுத்தால் நன்றாகத் தூங்குவார்கள். •தினமும் 50 கிராம் அளவு அல்லது ஒரு துண்டு பப்பாளிப் பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். மலம் நன்றாக வெளியேறி வயிறு சுத்தமாகும். •பழவகைகளுள் பேரிக்காயை யாரும் அவ்வளவாக விரும்பிச் சாப்பிட மாட்டார்கள். ஆனால், பேரிக்காய் இதயத்துக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை உண்டாக்கும். நிறைமாதக் கர்ப்பிணிகள் பேரிக்காயைச் சாப்பிட்டால் தாய்ப்பால் பெருகும். •முள்ளங்கியை. அடிக்கடி சமையல் செய்தோ பச்சையாகவோ சாப்பிட்டு வந்தால் வாதநோய் நீங்கும். இருமல், கபம், குடல் சம்பந்தமான நோய்களுக்கும் முள்ளங்கி ஒரு சிறந்த மருந்தாகும். •இரவு படுக்கும் முன் சிறிதளவு விளக்கெண்ணெயைக் கண் இமைகளில் தடவி வந்தால், கண்கள் கவர்ச்சிகரமாய் மாறிப் பளீரென்று ஒளியுடன் திகழும், சுருக்கம் விழாமலிருக்கும். •சிறிதளவு வெந்தயத்தை ஊறவைத்து, அரைத்து, தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் குளித்தால், முடி உதிர்வது நின்றுவிடும். • பாசிப்பயறு மாவுடன் சந்தனத்தைக் கலந்து தினமும் இரவில் முகத்தில் பூசிக்கொண்டு படுத்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்துவிடும். •எலுமிச்சம்பழத்தின் தோலைக் காயவைத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு அவ்வப்போது சிறிதளவு ரசத்தில் சேர்த்தால் ரசம் மணக்கும். மேலும் இப்பொடியுடன், உப்பு, புதினாப்பொடி சேர்த்துப் பல் பொடியாகவும் பயன்படுத்தலாம். ஈறுகளுக்கு மிகவும் நல்லது. •ஆரஞ்சுப் பழத்தின் தோலை நன்றாய்க் காயவைத்து எடுத்துக்கொண்டு தினமும் இரவில் கொசுவத்தி போல் கொளுத்தி வைத்தால் கொசுக்கள் நம் வீட்டிற்குள் வாராது ......

Friday, 16 August 2013

யார் இந்த ஐரோம் ஷர்மிளா?

1972-ல் பிறந்த இந்த ஐரோம் சாரு ஷர்மிளா மணிப்பூரின் இரும்புப் பெண் என அனைவராலும் அழைக்கப் படுபவர். நவம்பர் 4, 2000 முதல் இன்று வரை இவர் உண்ணா விரதம் இருந்து வருகிறார். இவர் அப்படி இருக்கக் காரணம் என்ன? ஜனநாயக் நாடு என சொல்லப் படும் இந்தியாவில் உள்ள மணிப்பூரில் என்ன நடக்கிறது?

செப்டம்பர் 11, 1958 முதல் அருணாச்சலப்ரதேஷ், அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், நாகாலந்து, திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் Armed Forces (Special Powers) Act (AFSPA) நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டத்தின் முலம் இராணுவத்திற்கு வழங்கப் பட்டிருக்கும் உரிமைகள் பொது மக்களைக் கொன்று குவிக்கலாம் எனும் அளவில் இருக்கிறது.

*** இந்த சட்டத்தின் படி பொது வெளியில் 5 பேர் சேர்ந்து நின்றால் அவர்களை சுட்டு வீழ்த்தலாம்.
*** மேலும் யாரை வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் எவ்வித பிடி வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம். அவர்களை சுட்டு வீழ்த்தவும் அதிகாரம் உண்டு.
*** இதற்காக அவர்கள் எங்கு வேண்டுமானாலும் எவ்வித உத்தரவுமின்றி தேடுதல் வேட்டை நிகழ்த்தலாம்.
*** இராணுவ அதிகாரிகள் மீது எவ்விதமான வழக்கும் பதிவு செய்ய இயலாது.


இதனை பயன்படுத்தி இராணுவம் அப்பவிப் பொதுமக்களையும் கொன்று குவித்திருக்கிறது. நவம்பர் 1, 2000 ம் ஆண்டு மணிப்பூரில் உள்ல "மலோம்" எனும் நகரத்தில் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பத்து அப்பாவி பொதுமக்களை இராணுவம் சுட்டுக் கொன்றது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பல கோரிக்கைகள் எழுந்த போதும் "AFSPA" அதற்கு இடமளிக்கவில்லை. அப்போது 28 வயதே ஆன ஐரோம் ஷர்மிளா இந்த சட்டத்திற்கு எதிரக போர்க் கொடி தூக்கினார். தனது உண்ணாவிரதத்தை நவம்பர் 4, 2000 அன்று துவக்கினார். இந்த சட்டம் அமலில் இருக்கும் மாநிலங்களில் இருந்து நீக்கப் பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

நவம்பர் 6, 2000 அன்று அவர் IPC 309 பிரிவின் கீழ் "தற்கொலை முயற்சி" செய்வதாகக் கூறி போலீசாரால் கைது செய்யப் பட்டார். தண்ணீர் தவிர வேறு ஆகாரங்களை உட்கொள்வதில்லை என்பதில் ஷர்மிளா உறுதியாக இருந்து வருகிறார். ஆனால் கைது செய்யப் பட்ட ஒருவர் உயிரைக் காப்பது காவல் துறையின் வேலை என்பதால் வலுக்கட்டாயமாக அவருக்கு "Nasogastric intubation" (அதாவது மூக்கின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ட்யூப் உபயோகித்து நீர் வகை உணவுகளை அளித்தல்) செய்தது.

இதன்பின் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அவர் தற்கொலை முயற்சி எனும் பிரிவில் கைது செய்யப் பட்டு இன்றுவரை சிறையிலிருக்கிறார். ஜீன் 6, 2005ம் ஆண்டு ஜீவன் ரெட்டி கமிசன் இந்த சட்டம் குறித்தான தனது கருத்துக்களைத் தெரிவித்தது. ஆனால் மன்மோகன் சிங் அரசு அதை ஒன்றரை ஆண்டுகள் வரை கிடப்பில் போட்டது. அதன் பின் ப்ரணாப் முகர்ஜி ரெட்டி கமிசன் அளித்த சட்டத் திருத்தக் கருத்துக்களை நிராகரித்தார்.

அத்துடன் அவர் இது போன்ற மாநிலங்களில் இராணுவம் இத்தகைய அதிகாரங்கள் இன்றி செயல் பட முடியாது என கருத்தும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2, 2006 ல் ஷர்மிளா விடுவிக்கப் பட்டது 4 மாத காலங்கள் டெல்லிக்குத் தப்பிச் சென்று அங்குள்ள மாணவர்கள், சமூக அமைப்புகளுடன் கை கோர்த்து ஒரு போராட்ட ஊர்வலம் நடத்தினார்.

அவரது உண்ணாவிரதம் டெல்லியிலும் தொடர்ந்ததால் டெல்லி போலீசாரால் மீண்டும் தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் கைது செய்யப் பட்டார்.அவர் பிரதமர், குடியரசு தலைவர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோருக்கு கடித்டங்கள் அனுப்பினார். ஆனால் அவர்களிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
இன்று வரை தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வரும் இரும்புப் பெண் ஐரோம் ஷர்மிளாவை நம்மில் பலருக்குத் தெரியாது. காரணம் நமது மீடியாக்களின் கையாலாகாத் தனம் மட்டுமல்ல. நமக்கு அவர் ஒரு சினிமா நாயகியாக இருந்திருந்தால் தெரிந்திருக்கும். ஆனால் அவர் சமூக நாயகியாக அல்லவா இருக்கிறார். எப்படி அவரைத் தெரிந்து கொள்ள முடியும்?


நன்றி 
B Mrugavel (http://pulavanpulikesi.blogspot.in)

Friday, 5 July 2013

வெற்றிலை

வெற்றிலை போடுவது ஏன்?

பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள் கூட அதில் அடங்கி இருக்கும்.

தாம்பூலம் தரிப்பதில் கூட இப்படி ஒரு நல்ல விஷயம் அடங்கி இருக்கிறது இது வெற்றிலை போடும் நிறைய பேருக்கு தெரியுமா என்பது நமக்கு தெரியாது பொதுவாக வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும் போது அந்த சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.

மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது என்பதற்கான காரணத்தை ஆயுர்வேதம் சொல்லும் போது உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது. என்று சொல்கிறார்கள் இது முற்றிலும் சரியான காரணமாகும் இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்பிற்கு வருகிறது இந்த மூன்று நிலைகளையும் சரியானபடி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை போக்கவல்லது வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும். இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று தோஷங்களையும் முறைபடுத்தும் நிலை அமைந்து விடுகிறது. இதுமட்டுமல்லாது தாம்பூலத்தோடு சேர்க்கும் ஏலம், கிராம்பு, ஜாதிபத்திரி போன்றவைகள் வாயில் உள்ள கிருமிகளை மட்டுபடுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.

ஆக மொத்தம் தாம்பூலம் தரிப்பதில் இத்தனை நல்ல விஷயங்கள் அடங்கி உள்ளன அதனால் தான் நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கிய பங்கு கொடுக்கபடுகிறது. தாம்பூலம் போடுவது எந்த இடத்தில் கெட்ட பழக்கமாக மாறுகிறது என்றால் வெற்றிலை பாக்கு சுண்ணாம்போடு புகையிலையும் சேரும் போது தீய பழக்கமாக மாறி விடுகிறது. நமது முன்னோர்களின் தாம்பூலத்தில் புகையிலை கிடையாது. புகையிலை என்பது இடையில் சேர்க்க பட்ட தீய பழக்கமாகும்.

இப்போது வயதானவர்களுக்கு இருக்க கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு முறிவு ஆகும் சிறிதளவு முறிவு ஏற்பட்டு விட்டாலும் முதுமையின் காரணமாக பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தை பரிசாக தந்து விடுகிறது. ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது இதற்கு காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கமே ஒரு குறிப்பிட்ட அளவு சுண்ணாம்பு சத்து உடம்பிற்கு நேராக கிடைக்கும் போது எலும்புகள் வலுப்பட்டு விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க பட்டிருக்கிறது. காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும். காரணாம் மதிய நேரம் வந்து வெப்பம் அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும். அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்துகொள்ள வேண்டும் அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுபடுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துகொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.



இறைவனுக்கு வெற்றிலை பாக்கு படைப்பது ஏன்?

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனைத்திலும் முக்கிய இடம் வகிக்கிறது வெற்றிலை. இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. தாம்பூலம் எனப்படும் வெற்றிலைக்கு ஜீரணத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு. வெற்றிலையோடு சேர்ந்த சுண்ணாம்பு உடம்புக்கு தேவையான கால்சியச் சத்தையும் தருகிறது. சுபநிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு அழைக்கும்போது அழைப்பிதழோடு வெற்றிலை, பணம் வைத்து அழைப்பார்கள்.

வெற்றிலை மருத்துவம்

வெற்றிலை பயன்--சித்த மருத்துவம்

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலை பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. இது தவிர வெற்றிலையைப் பயன்படுத்தி பல நோய்களையும் குணப்படுத்தலாம். அரைடம்ளர்தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

வயிற்றுவலி:

இரண்டு தேக்கரண்டியளவு சீரகத்தினை மைபோல் அரைத்து மூன்று
தேக்கரண்டி வெண்ணெயில் போட்டு கலக்கி 5வெற்றிலையை எடுத்து அதன் பின் புறத்தில் இந்தக்கலவையை கனமாக தடவி, மருந்து தடவிய பாகத்தை சட்டியில் படும்படி வைத்து வதக்க வேண்டும். ஒவ்வொரு வெற்றிலையையும் வதக்கிய பின் ஒரு டம்ளர் தண்ணீரை விட்டு நன்றாக கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி அந்த கசாயத்தை ஒரு வேளை மட்டும் சாப்பிட்டால் வயிற்றுவலி நீங்கி விடும்.

தலைவலி:

வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும்.

தேள் விஷம்:

இரண்டு வெற்றிலையை எடுத்து அதில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி தேங்காய் துண்டுகள் சிலவற்றினையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி:

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை ஒரு கைப் பிடியளவும் அருகம்புல் ஒரு கைப்பிடியளவும் ஒரு சட்டியில் போட்டு 500 மிலி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மிலி ஆக குறையும் வரைகொதிக்க விட்டு, பின்பு வடிகட்டி ஆற வைத்து வேளைக்கு 50 மிலி வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்:

அல்சர் உள்ளவர்கள் இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை 1 கைப்பிடி வேப்பிலை 5 ஆகியவற்றை மேலே உள்ள முறைப்படி கசாயம் தயாரித்து மூன்று வேளை அருந்தி வரவும். முற்றின வெற்றிலையைச் சாறு பிழிந்து அதில் இரண்டு அவுன்ஸ்சாற்றுடன் 3 மிளகு அதே அளவு சுக்கு ஆகியவற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் கொடுத்தால் இரைப்பு மூச்சுத் திணறல் குணமாகும்.

சத்தான சுவையுள்ள சூப் வகைகள்

இன்று படித்ததில் உங்களுக்கும்... 04.07.2013.

உடலுக்கு சத்தான சுவையுள்ள சூப் வகைகள்:-

1. நெல்லிக்காய்:-

விட்டமின் ‘சி’ செறிந்த நெல்லிக்காய் ஆயுளை நீடிக்கும் ஆற்றலுடையது. சிறந்த ஊட்டச்சத்தும், உயிர்ச்சத்தும் உடையது. குறிப்பாக நுரையீரலுக்கு வலிமை தரும். உடலுக்கு உரமூட்டும்.

நெல்லிக்காய் சூப்

தேவை

நெல்லிக்காயை வேகவைத்த
தண்ணீர் – 4 கப்
கார்ன் ப்ளார் – 1 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – 1
வெண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு

செய்முறை

பெரிய வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தை இரண்டு நிமிடம் வெண்ணெய்யில் வதக்கவும். பின்பு மாவையும் சேர்த்து வறுக்கவும். நெல்லிக்காய் வேகவைத்த தண்ணீரைச் சேர்த்து பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும். உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறவும்.

2. வில்வம்:-

இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.

வில்வ சூப்

தேவை

வில்வ இலை – 1 கப்
(அ) பொடி 15 கிராம் – 3 டீஸ்பூன்
தக்காளி – 1
வெங்காயம் – 1
கொத்தமல்லி – சிறிது
இஞ்சி, பூண்டு – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
கம்பு மாவு – 2 டீஸ்பூன்
எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிறவெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.

3. ஆவாரம் பூ:-

அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.

ஆவாரம் பூ சூப்

தேவை

ஈர ஆவாரம்பூ – 1 கப்
(அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன்
தண்ணீர் – 250 மி.லி
கேரட் – 1
பீன்ஸ் – 5
தக்காளி – 1
வெங்காயம் – சிறிது
இஞ்சி – சிறிது
பூண்டு – 2 பல்
கொத்தமல்லி, புதினா – சிறிது
மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு – தேவையான அளவு

செய்முறை

கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிறகாய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.

4. முடக்கற்றான்:-

இதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.

முடக்கற்றான் சூப்

தேவை

முடக்கத்தான் கீரை – 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சீரகம் – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் – 3
புளி – எலுமிச்சை அளவு
பெருங்காயம் – சிறிதளவு
பூண்டு – 1
உப்பு – தேவையான அளவு

செய்முறை

கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.

5.முருங்கை கீரை:-

முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை உள்ளது.நீரிழிவு நோயாளிகளுக்கு முருங்கைக் கீரை சூப் மிகவும் நல்லது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்றுப்போக்கு குணமாக முருங்கை இலையை சூப் வைத்தும் குடிக்கலாம். மேலும் காய்ச்சல், மூட்டு வலியைப் போக்கும் குணம் கொண்டது.உடலுக்குத் புத்துணர்ச்சியைத் தரும் மேலும் கண் பார்வை தெளிவாகும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தாதுவை விருத்தி செய்யும்.

முருங்கைக்கீரை சூப்

தேவை

முருங்கைக்கீரை - 1 கைப்பிடி,
புதினா, கறிவேப்பிலை,
கொத்தமல்லி எல்லாம் சேர்த்து - 1 கைப்பிடி,
மிளகுத் தூள் - அரை டீஸ்பூன்,
சீரகத் தூள் - கால் டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப,
தேங்காய்ப் பால் - கால் கப்,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை

3 கப் தண்ணீரில் கீரை மற்றும் புதினா, கறிவேப்பிலை, கொத்தமல்லி என எல்லாவற்றையும் சேர்த்து மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். கீரையின் சாறெல்லாம் இறங்கியதும், அடுப்பை அணைத்து வடிகட்டவும். லேசாக ஆறியதும் அதில் தேங்காய்ப் பால் சேர்த்து மிளகு, சீரகத் தூள் கலந்து பரிமாறவும்.

மூச்சு

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15
முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?

ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.

{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}

மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்,

100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,

93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,

87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,

80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,

73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,

66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன்
ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...

இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு
கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7
வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில்
கொள்ளவேண்டும்.

2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு
0 முறை சுவாசித்தால்
முடிவேயில்லை (இது சித்தர்களால்
மட்டுமே முடியும்).

மருதாணி

 1.மேகநோய் -: பால்வினை நோயான மேக நோய்க்கு இது சிறந்த மருந்து. இதன் இலை 10 கிராம் அளவு 6 மிளகு, ஒரு பூண்டுதிரி, 5 கிராம் மஞ்சள் ஆகிய வற்றை அரைத்து நாளும் வெறும் வயிற்றில் குடித்துப் பால் அருந்தவும். புளி, புகை, காரம் கூடாது, இதனால் மேக நோய் அதனால் ஏற்படும்கிரந்திப் புண், அரிப்பு ஆகியன குணமாகும். 10 - 20 நாள் சாப்பிட வேண்டும்.

2.தோல் நோய் -: மேக நோயால் ஏற்பட்ட தோல் பற்றிய அரிப்பு, படை ஆகிய நோய்களுக்கு, இந்த இலையை அரிசிச் சோற்றுடன் இரவு ஊறப் போட்டக் காலை வெறும் வயிற்றில் நீராகாரமாகச் சாப்பிட வேண்டும். உப்பில்லாத பத்தியம் இருத்தல் வேண்டும். 10 - 15 நாள் சாப்பிட வேண்டும்.
புண்கள் - ஆறாத வாய்ப் புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். 3-5 நாளில் குணமாகும். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.

3.முடிவளர -: இதன் தைலம் முடி வளர்க்கும் இள நரையை அகற்றும்.இரும்பு வாணலியில் தேங்காய் நெய் 500 மி.லி. விட்டு இதன் இலை 100 கிராம் போட்டு பொரித்து எடுக்கவும். இலையின் சாறு எண்ணெயில் சேர்த்து சிவப்பாக மாறிவிடும். நறுமணத்திறுகாக 10 கிராம் சந்தனத் தூள் போடலாம். அரைத்துப் போட்டுக் காய்ச்சலாம். இந்த தைலத்தை நாளும் தலைக்குத் தேய்க்க முடி வளரும் நரைமாறும்.
உறக்கமின்மை -: தூக்கமின்மைக்குத் தூக்க மாத்திரை சாப்பிடுதல் கூடாது. அது நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும். பைத்தியம் பிடிக்க வைக்கும். மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றி, தலைமாட்டில் வைத்துப் படுத்தால் தூக்கம் வரும். பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும். ஒருசிலருக்கு இம்மணம் தலைவலியை உண்டாக்கும்.

4.பேய் பூதம் -: "மாப்பில்லி சூனியம், விருத்தாண்ட பேய் பூதம், மேவும்" என்று அகத்தியர் கூறுகின்றார். இது சனி பகவான் மூலிகை என்பதால் பேய், பூதம், துஷ்ட தேவதை விலகிவிடும். இதன் பூவையும், உலர்ந்த காயையும் தூள் செய்துசாம்பராணியுடன் கலந்து புகைக்க பேய், பூதம் விலகி ஓடும். பில்லி, சூனியம் நம்மை அண்டாது. வெள்ளளி, திங்கள் வீட்டடில் இதனைப் புகைக்க வேண்டும்.

5.கரப்பான் புரகண் -: பான் புண் என்பது கரும்படையுடனை நீரொழுகும் புண்ணாகும். இது அரிப்பையும் கொடுக்கும். நீர் வடியும் இடம் பட்ட இடம் படையுடன் புண் உண்டாகும். இதன் வேர்பட்டை 50 கிராம், முற்றிய தேஙுகாய் 100 கிராம், மிருதார்சிங்கி 15 கிராம், அரைத்து ஆமணுக்கு நெய் விட்டு மேல் பூச்சாகப் பயன்படுத்தலாம். இதனால் சகல கரப்பான் படையும் புண்ணும் குணமாகும்.

6.கால் ஆணி -: இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.

7.படைகள்- :கரும்படை, வண்ணான் படை கால் இடுக்கிலும், இடுப்பிலும், கழுத்து, கை இடுக்கிலும் வரும். இதற்கு ஒரு பிடி மருதாணி இலையுடன் 5 கிராம் 501 பார் கதர் சோப்புவைத்து அரைத்துக் களிம்பு போல தடவி வந்தால் கரும்படை யாவும் சுகமடையும். 10 -15 நாள் பூச வேண்டும். வண்டு கடிக்கும் சொறி, சிரங்கிற்கும் இதனைப் பூச்சு மருந்தாகப் பயன்படுத்தலாம்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் சாப்பிட்டா வெவரமாகலாம்!

‘புத்தி சரியில்லாதவன் வெண்டையை தின்னா வெவரமாயிருவான்...’ என்று சில கிராமப்புறங்களில் சொல்வது உண்டு. இது ஓரளவல்ல... முழுக்க முழுக்க உண்மை. வெண்டைக்காயை அதிகமாக சாப்பிட்டு வரும் பட்சத்தில், அதன் காம்பை போலவே நமது புத்திக்கூர்மையும் நீ.....ளும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு ஏற்படும் என ஆய்வுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன.

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதன் பூர்வீகம் எத்தியோப்பியா. பின்னர் அப்படியே தனது ‘வேர் பரப்பி, இலை பரப்பி’ அரேபியா வழியாக மெல்ல...மெல்ல இந்திய மண்ணில் நுழைந்து காய்க்கத் தொடங்கியது. இதுதான் வெண்டையின் வரலாறு.

அமெரிக்காவில் இளம் வெண்டைக்காயை நறுக்கி முட்டையில் தோய்த்து, ரொட்டித்தூள் அல்லது சோளமாவில் புரட்டி எடுத்து எண்ணெயில் பொறித்து சாப்பிட்டு வருகிறார்கள். முற்றின வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கு பயன்படுத்துகின்றனர். வெண்டைக்காயின் விதைகளை காயவைத்து பொடியாக்கி காப்பி பொடி போல பாலில் கலந்து சாப்பிடும் ‘பார்ட்டிகளும்’ உண்டு. இது உடலுக்கு மிகவும் நல்லது.

இதில் உள்ள பெகடின் என்ற நார்ப்பொருள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது. இதயத்துடிப்பை சீராக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருளும் உள்ளது. வெண்டையை சாப்பிடுவதன் மூலம் நமது உடலுக்கு 66 கலோரி கிடைக்கிறது. இதனாலேயே இந்தக்காய் மகத்துவம் நிறைந்ததாக திகழ்கிறது.

வெண்டைக்காயை நறுக்கும் போது பிசுபிசுவென்று ஒரு திரவம் வெளிவருவதை உணர்ந்திருப்பீர்கள். அதை சிலர் அறியாமல் தண்ணீரில் கழுவி சமைப்பது உண்டு. இந்த பிசுபிசு திரவத்தோடு சமைத்து சாப்பிட்டால்தான் மூளைக்கு புத்துணர்ச்சியும், இதயத்திற்கும் இதத்தையும் தருகிறது.

காயோடு இலை, விதை, வேர் ஆகியவற்றிற்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு. இதில் உள்ள நார்ப்பொருள் மலச்சிக்கலை தீர்ப்பதோடு, குடல்புண்ணையும் ஆற்றும். வாய் நாற்றம் நீங்கும்.

பிஞ்சுகளை நறுக்கிப்போட்டு மோர்க்குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும். மேலும், இதனுடன் சர்க்கரை சேர்த்து சாறு செய்து சாப்பிட்டால், இருமல், நீர்க்கடுப்பு சரியாகும். வெண்டைச்செடியின் வேரை காய வைத்து பொடியாக்கி பாலுடன் சேர்த்து சாப்பிட்டால், தாம்பத்ய வாழ்க்கை தரமாக இருக்குமாம்...! ஆண்மை குறைபாடு உள்ளவர்கள் அதிகம் சாப்பிட வேண்டிய காய் இது.

நமது உடலில் சிறுநீரை நன்கு பிரிய வைத்து, உடலுக்கு நல்ல குளிர்ச்சியை தரும். தோலில் ஏற்படும் வறட்சித்தன்மையை நீக்கும் ஆற்றலும் இதற்கு உண்டு. படிக்கும் குழந்தைகளுக்கு நாள்தோறும் உணவில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, வதக்கி சாப்பிட வைத்தால் நினைவாற்றல் பெருகும். உடலில் உள்ள மந்தத்தன்மை நீங்கி சுறுசுறுப்பாக்கும். மற்றவர்கள் வாரத்தில் 3, 4 நாள் வெண்டைக்காயை சாப்பிடலாம். கிடைப்பவர்கள் தினந்தோறும் கூட சாப்பிடலாம். அட...எங்கே பைய எடுத்து கிளம்பிட்டீங்க... வெண்டைக்காய் வாங்கவா... ம்...ம்...!.

எலுமிச்சை பழம்

எலுமிச்சை பழம்

பழத்தின் தாயகம் இந்தியா. இதில் உள்ள சத்துக்கள் -

இதில் வைட்டமின் சி யும், அஸ்கார்பிக் ஆசிட்டும் உள்ளன.சாதாரணமாக பேரீச்சம் பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் என்பார்கள். அதைவிட அதிகமாக எலுமிச்சம் பழத்தில் உள்ளது. உடலின் நரம்பு மண்டலத்திற்கு வலிமையை ஊட்டமளிக்கக்கூடிய ஆற்றல் எலுமிச்சம் பழத்திலுள்ள பாஸ்பரஸ் என்ற ரசாயனப் பொருளுக்கு உண்டு. இது மட்டுமின்றி நரம்புகளுக்குப் புத்துணர்ச்சியையும் தெம்பையும் அளிக்கிறது. மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது.

உயிரியல் ரசாயனமாற்றம் நடைபெறுவதில் பங்கு வகிப்பது வைட்டமின் -சி ஆகும். …ஸ்கர்வி எனும் ஒருவகை நோய் உலகின் பலரை துன்புறுத்தியது. இதற்கு காரணம் என்ன? என்று கண்டறிந்த போது வைட்டமின் சி பற்றாக்குறைதான் காரணம் என்று கண்டறிந்தார்கள். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். அதுவும் அதிகம் செலவு செய்து. ஆனால் ஒன்று தெரியுமா? இந்தமாத்திரைகளில் காய்கனிகளில் இருப்பதைவிட குறைவாகத்தான் வைட்டமின் சி இருக்கிறது. எனவே காய்கனிகளுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும்.

குழந்தைகளுக்கு 35 மி.கிராமும், பெரியவர்களுக்கு 50 மி.கிராமும், பாலு}ட்டும் தாய்க்கு 80 மி.கிராம் வைட்டமின் சியும் தினம் தேவையாகும்.

என்ன பலன்?

எலுமிச்சம் பழத்தை அன்றாட உணவோடு ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வந்தால் ஜீரண சக்தி அதிகமாகும். நல்ல பசியும் எடுக்கும். விரல் முனையில் தோன்றும் உகிர் சுற்று நோய்க்கு எலுமிச்சம் பழத்தை விரல் முனையில் செருகி வைப்பதுண்டு.

எலுமிச்சை ஊறுகாய் மண்ணீரல் வீக்கத்துக்கு நல்லது. காய்ச்சல், அழற்சி, கீல் வாதம், சீத பேதி,வயிற்றுப்போக்கு போன்றவற்றிற்கும் இது மருந்தாக உதவுகிறது.


நமது நாட்டில் காபி, தேநீர் போன்ற பானங்கள் அருந்தும் பழக்கமே அதிகம் இருந்து வருகிறது. காபி, தேநீர்
போன்றவை உடல் நலத்திற்குக் கேடு விளைவிப்பவையாக இருக்கின்றன. ஆகவே காப்பி,தேநீர் பழக்கத்தை விட்டுவிட்டு எலுமிச்சை ரசபான வகைகளை அருந்தும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளலாம்.

எச்சரிக்கை

எலுமிச்சம் பழச்சாற்றை வேறு கலப்பு இல்லாமல் தனியாக அருந்தினால் தொண்டை, மார்பு ஆகியவை பாதிக்கப்பட்டு பலவிதமான தொல்லைகளுக்கு இலக்காக வேண்டி வரும். எலுமிச்சம் பழ ரசத்தைத் தண்ணீர், வெந்நீர், தேன் போன்ற ஏதாவது ஒரு பொருளுடன் சேர்த்து உண்ணலாம். அத்தோடு உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து அதன் புளிப்புச் சுவையைக் குறைத்த பிறகு குடிப்பது நலம். பச்சைக் காய்கறிகள், வேறு ஏதாவது பழங்களின் ரசம் ஆகியவற்றில் எலுமிச்சம் பழ ரசத்தைச் சேர்த்தும் அருந்தலாம்.

சிலர் பருப்புக்கூட்டு போன்றவற்றில் எலுமிச்சம் சாற்றைப் பிழிந்து உண்ணுவார்கள். இது நன்மைக்குப் பதில் தீங்கையே விளைவிக்கும். எலுமிச்சம் பழ ரசத்தைக் கோடை நாளில் அருந்தினால் உடல் இயற்கையாகவே
குளிர்ச்சி பெறும். சூரிய வெப்பத்தினால் ஏற்படும் ஆயாசம் குறைந்து சுறுசுறுப்பாகச் செயற்பட முடியும். எலுமிச்சம் பழச்சாற்றை எப்போதுமே வெறும் வயிற்றில் அருந்தக்கூடாது. அப்படிச் செய்தால் இரைப்பை பெருமளவு
பாதிக்கப்பட்டு இரைப்பை புண் போன்ற குறைபாடுகள் ஏற்பட்டு அவதியுற நேரிடும்.

Thursday, 20 June 2013

பயனுள்ள இனையத்தளங்கள்!

சில பயனுள்ள இனையத்தளங்கள்!

சான்றிதழ்கள்

1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta

2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta

3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0

4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf

http://www.tn.gov.in/appforms/death.pdf

5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf

6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf

C. E-டிக்கெட் முன் பதிவு

1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/

http://www.irctc.co.in/

http://www.yatra.com/

http://www.redbus.in/

2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/

http://www.makemytrip.com/

http://www.ezeego1.co.in/

D. E-Payments (Online)

1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx

2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

http://www.itzcash.com/

3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/

https://www.oximall.com/

http://www.rechargeitnow.com/

4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி

5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/

http://shopping.indiatimes.com/

http://shopping.rediff.com/shopping/index.html

6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/

http://www.hdfcsec.com/

http://www.religareonline.com/

http://www.kotaksecurities.com/

http://www.sharekhan.com/

E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)

1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118

http://www.indianbank.in/education.php

http://www.iob.in/vidya_jyothi.aspx

http://www.bankofindia.com/eduloans1.aspx

http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp

http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp

http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm

2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/

http://www.tnresults.nic.in/

http://www.dge1.tn.nic.in/

http://www.dge2.tn.nic.in/

http://www.Pallikalvi.in/

http://www.results.southindia.com/

http://www.chennaionline.com/results

3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge

4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/

http://www.lampsglow.com/

http://www.classontheweb.com/

http://www.edurite.com/

http://www.cbse.com/

5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/

6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/

http://www.upsc.gov.in/

http://upscportal.com/civilservices/

http://www.iba.org.in/

http://www.rrcb.gov.in/

http://trb.tn.nic.in/

7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/

http://www.omcmanpower.com/

http://www.naukri.com/

http://www.monster.com/

8) .இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/

http://bsf.nic.in/en/career.html

http://indianarmy.nic.in/

9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/

10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/

http://www.gmail.com/

http://www.yahoochat.com/

http://www.meebo.com/

F. கணினி பயிற்சிகள் (Online)

1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/

http://www.intelligentedu.com/

http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html

2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.html

3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/

http://www.miniclip.com/

http://www.pogo.com/

http://www.freeonlinegames.com/

http://www.roundgames.com/

4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/

http://www.wikipedia.com/

http://www.hotmail.com/

http://www.yahoo.com/

http://www.ebuddy.com/

http://www.skype.com/

G. பொது சேவைகள் (Online)

1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/

http://www.rtiindia.org/forum/content/

http://rti.india.gov.in/

http://www.rti.org/

2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/

http://www.india-tourism.com/

http://www.theashokgroup.com/

http://www.smartindiaonline.com/

3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/

http://kalyanamalai.net/

http://www.bharatmatrimony.com/

http://www.shaadi.com/

4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/

5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/

http://freehoroscopesonline.in/horoscope.php

6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/

7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/

8) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/

9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/

http://www.dinamani.com/

http://www.dailythanthi.com/

http://www.tamilnewspaper.net/

http://www.vikatan.com/

http://www.puthiyathalaimurai.com/

http://www.nakkheeran.in/

10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/

http://www.bbc.co.uk/

11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx

12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx

H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய

1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/

I. வணிகம் (Economy)

1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/

http://www.rates.goldenchennai.com/

http://www.bullionrates.in/p/live-bullion-rates.html

2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/

http://www.xe.com/

H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)

1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/

2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in/services/employment.html

J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)

1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf

2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf

3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf

4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf

5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdf

http://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf

6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-boundary.pdf

7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet.net/english/Applforms/appln3.doc

http://www.tnreginet.net/english/Applforms/compulsory_marriage/Comp_Marriage_Application_Tamil.pdf

8) பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-patta-transfer.pdf

K. விவசாய சந்தை சேவைகள் (Online)

1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agriculture/e2030aci-nya2039-aea3153oiTM-moo2039/

3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/OnlineClient/categorywiseallvarietyreport.aspx

4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agriculture/major-traders-database/

5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/agriculture/database-of-growers-federations-farmers-associations-in-tamil-nadu/

6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.gov.in/price/login.php

7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php

8) தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/

9) வானிலை செய்திகள்
http://services.indg.in/weather-forecast/

L. தொழில் நுட்பங்கள்

1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech.tnau.ac.in/ta/Agriculture/agri_index_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/availabilityReports.php?type=Seed

3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_tech/biotech_ta.html

4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech.tnau.ac.in/ta/post_harvest/post_harvest_ta.html

5) உயிரி எரிபொருள்
http://www.agritech.tnau.ac.in/ta/bio_fuels/bio_fuels_ta.html

M. வேளாண் செய்திகள்

1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/itk/indi_farm_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/crop_protection/crop_prot_ta.html

2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech.tnau.ac.in/ta/sustainable_agri/susagri_ta.html

3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech.tnau.ac.in/ta/farm_enterprises/farm_enter_ta.html

4) ஊட்டச்சத்து
http://www.agritech.tnau.ac.in/ta/nutrition/nutrition_ta.html

5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech.tnau.ac.in/ta/farm_innovations/farm_innovations.html

N. திட்டம் மற்றும் சேவைகள்

1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov.in/schemes_states.html

2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schemes_ta.html

3) வட்டார வளர்ச்சி
http://www.agritech.tnau.ac.in/ta/dev_blocks/indextnmap_ta.html

4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech.tnau.ac.in/ta/banking/credit_bank_ta.htm

5) பயிர் காப்பீடு
http://www.agritech.tnau.ac.in/ta/crop_insurance/crop_ins_ta.html

6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech.tnau.ac.in/ta/kvk/kvk_ta.html

http://www.agritech.tnau.ac.in/ta/atma/atma_ta.html

7) NGOs & SHGs
http://www.agritech.tnau.ac.in/ta/ngo_shg/ngo_shg_ta.html

8) அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/

9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech.tnau.ac.in/ta/kisan/kisan_ta.html

10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech.tnau.ac.in/ta/mdg/mdg_ta.html

11) கேள்வி பதில்
http://www.agritech.tnau.ac.in/ta/faq_ta.html

12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech.tnau.ac.in/ta/tnau_publications/tnau_publish_ta.html

O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்

1) தோட்டக்கலை
http://www.agritech.tnau.ac.in/ta/horticulture/horti_index_ta.html

2) வேளாண் பொறியியல்
http://www.agritech.tnau.ac.in/ta/agrl_engg/agriengg_index_ta.html

3) விதை சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/seed_certification/seedcertification_index_ta.html

4) அங்கக சான்றிதழ்
http://www.agritech.tnau.ac.in/ta/org_farm/orgfarm_index_ta.html

5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech.tnau.ac.in/ta/sericulture/seri_index_ta.html

6) வனவியல்
http://www.agritech.tnau.ac.in/ta/forestry/forestry_tamil_index.html

7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech.tnau.ac.in/ta/fisheries/fish_index_ta.html

8) தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg.in/weather-forecast/

9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html

http://www.tnsamb.gov.in/fertilizers.html

10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisnet.tn.gov.in/website/FertilizerPrice.php

P. போக்குவரத்து துறை

1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in/appforms/form2.pdf

2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn.nic.in/transport/registerGrievanceLoad.do

3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in/sta/taxtables.html

4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn.nic.in/transport/grievance_statusLoad.do

5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/transport/transportTamMain.do

6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn.nic.in/transport/rtoStartNoListAct.do