Friday, 26 April 2013

கடவுள் துகள்


விஞ்ஞானிகள் கண்டுபிடித்த "கடவுள் இல்லாத' துகள்


அணுவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது என்று சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ரூதர்போர்ட் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்.
 அதன் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது. அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய முற்பட்டபோது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது. கல், மண்,பேனா, பென்சில், கார், விமானம், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள்தான் அடிப்படை.
 இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இயற்பியல் துறையில் இரு வகையான விஞ்ஞானிகள் உண்டு. ஒரு வகை விஞ்ஞானிகள் காகிதம் பென்சில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி தங்கள் சிந்தனை ஆற்றல் மூலம் இது இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படியான துகள் இருந்தாக வேண்டும் என்று கூறுபவர்கள். இவர்களை கொள்கை விஞ்ஞானிகள் என்று வருணிக்கலாம். இவர்கள் கூறியவை சரிதானா என்று பரிசோதனைகள் மூலம் ஆராயும் விஞ்ஞானிகள் இன்னொரு வகை. ஐன்ஸ்டீன் முதல் வகையைச் சேர்ந்தவர். =ஙஇ 2 என்பது முதல் அவர் கூறிய பல கொள்கைகள் சரியே என்று பின்னர் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
 அடிப்படைத் துகள்கள் 16 என்று சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவர் போலவே மேலும் சில விஞ்ஞானிகளும் இன்னொரு முக்கியமான துகள் இருந்தாக வேண்டுமே என்று 1964-ஆம் ஆண்டு வாக்கில் கூறினர். விஞ்ஞானி ஹிக்ஸ் கூறிய துகள் போஸôன் என்ற வகையைச் சேர்ந்தது. அதுவரை அறியப்படாத அத் துகளுக்கு ஹிக்ஸ் போஸôன் என்று பெயர் வைக்கப்பட்டது. அதாவது ஹிக்ஸ் கூறிய வகையைச் சேர்ந்த போஸôன் என்பது அதன் பொருள். இந்த போஸôனை எங்கே தேடுவது? பொதுவில் போஸôன் வகைத் துகள்கள் அல்பாயுசு கொண்டவை. தோன்றிய சில கணங்களில் வேறு வகைத் துகளாகி விடும்.
 ஹிக்ஸ் தாம் குறிப்பிட்ட போஸôன் துகள் பற்றி ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி வைத்தார். அதாவது எல்லா அடிப்படைத் துகள்களும் வெவ்வேறு அளவில் நிறை (ஙஹள்ள்) கொண்டவை. நிறை வேறு எடை என்பது வேறு என்றாலும் எளிதில் புரிந்து கொள்ள நிறை என்பதை எடை என்றும் சொல்லலாம். 16 அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸôன் தான் காரணம் என்று அவர் சொன்னார். ஆகவே ஹிக்ஸ் போஸôனைக் கண்டுபிடிப்பது மிக அவசியமாகியது. தவிர, அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் விளக்கும் வகையில் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளில் பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு என்ற ஒட்டுமொத்தக் கொள்கையை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இதை நற்ஹய்க்ஹழ்க் ஙர்க்ங்ப் என்று கூறுவர். ஹிக்ஸ் போஸôனைக் கண்டுபிடிக்காவிட்டால் இக் கொள்கையில் பெரிய ஓட்டை இருப்பதாகி விடும். ஆகவேதான் ஹிக்ஸ் போஸôனைத் தேடுவது முக்கிய விஷயமாகியது.
 ஹிக்ஸ் போஸôனை எங்கே கண்டுபிடிப்பது? இங்கு ஐன்ஸ்டீன் உதவிக்கு வருகிறார். பொருளை ஆற்றலாக மாற்றலாம். அதேபோல ஆற்றலையும் பொருளாக மாற்றலாம். ஐன்ஸ்டீனின் =ஙஇ 2 என்ற கொள்கையின் அர்த்தமே அதுதான். ஆகவே பெரும் ஆற்றலைத் தோற்றுவிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில் பொருள் தோன்றும். உதாரணமாக, புரோட்டான்களைப் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதவிட்டால் பெரும் ஆற்றல் தோன்றும். அப்போது தோன்றும் நுண்ணிய துகள்களை ஆராய்ந்தால் அவற்றில் ஹிக்ஸ் போஸôன் தட்டுப்படலாம்.
 துகள்களை இப்படி மோத விடும் ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஆட்டுக் கிடா சண்டைபோல சிறிய அளவில் இருந்து பின்னர் டைனோசார்களை மோத விடுவதைப்போன்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெர்மிலாப் என்ற துகள் மோதல் ஆராய்ச்சிக் கூடம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜெனீவா நகருக்கு அருகே பாதாளத்தில் பிரம்மாண்டமான துகள் மோதல் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெர்மிலாப் அண்மையில் மூடப்பட்டது.
 ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக செர்ன் (இஉதச) என்று அழைக்கப்படுகிறது. இங்கு 100 மீட்டர் ஆழத்தில் புரோட்டான்களை மோத விடும் ஆராய்ச்சிக் கூடம் உள்ளது. குதிரைப் பந்தய மைதானம்போல இது வட்ட வடிவில் உள்ளது. இங்கு வலுவான காந்தக் கட்டைகளைப் பயன்படுத்தி புரோட்டான்களை விரட்டோ விரட்டு என்று விரட்டுவார்கள். இரு புறங்களிலும் ஆட்கள் நின்று கொண்டு ஒரு குதிரையை மாறி மாறி சவுக்கால் அடித்தால் அது மேலும் மேலும் வேகமாக ஓடும். புரோட்டான்கள் அதுபோல விரட்டப்படுகின்றன. 27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் விசேஷ சூழ்நிலைகளில் புரோட்டான்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் வகையில் விரட்டப்படும். அதேசமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து இதே வேகத்தில் புரோட்டான்கள் பாய்ந்து வரும். எதிரும் புதிருமாக அதி வேகத்தில் வருகின்ற இந்தப் புரோட்டான்கள் ஒரு கட்டத்தில் ஒன்றோடு ஒன்று மோதும்படி செய்யப்படும். பல கோடி புரோட்டான்கள் இவ்விதம் ஒன்றோடு ஒன்று மோதும். அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து பொறிகள் வெளிப்படுவதைப் போல ஒளிக் கீற்றுகள் பறக்கும். பயங்கர மோதலின் விளைவாக பெரும் ஆற்றல் வெளிப்படும். ஆற்றல் துகள்களாக மாறலாம் என்ற கொள்கையின்படி பல துகள்கள் நாலா புறங்களிலும் பாயும். இவற்றில் பலவும் அல்பாயுசாக உடனே வேறு துகள்களாக மாறும்.
 இந்த மோதல்களின்போது தோன்றும் விளைவுகளை மிக நுட்பமான கேமராக்கள் படம் எடுக்கும். அப்படங்களை விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்வர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூடத்தில் கடந்த பல மாதங்களாக விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸôன்கள் தொடர்பாக மிகத் தீவிரமாகப் பரிசோதனைகளை நடத்தி புதன்கிழமையன்று முடிவுகளை அறிவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் ஆற்றலைத் தோற்றுவித்ததால் இப்போதைய பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸôன்கள் தட்டுப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 ஹிக்ஸ் போஸôன்கள் என்று சொல்லத்தக்க துகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் குழுவினர் மிக ஜாக்கிரதையாக அறிவிப்பு வெளியிட்டனர். பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸôன் சில கணங்களில் வேறு துகளாக மாறினாலும் ஹிக்ஸ் போஸôன் எவ்விதமான துகள்களாக மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். உருமாறிய போஸôன்கள் அவ்விதத் தன்மைகளைக் காட்டியதால் அவர்கள் கண்டுபிடித்தது ஹிக்ஸ் போஸôன்களே என்று கருதப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு மிக மகத்தானது என்றே சொல்ல வேண்டும்.
 ஹிக்ஸ் போஸôன் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளியான உடனேயே மேற்கத்திய பத்திரிகைகளும் டிவி சேனல்களும் "கடவுள் துகள்' கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இதில் கடவுள் எங்கே வந்தார்?
 ஹிக்ஸ் போஸôன் பற்றி ஒரு சமயம் பிரபல விஞ்ஞானி ஒரு நூலை வெளியிட்டார். இத்துகள் விஞ்ஞானிகளை அலைக்கழிப்பதை அவர் மனதில் கொண்டு எரிச்சலுடன் தமது நூலுக்கு எர்க்க்ஹம்ய் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங் என்று தலைப்பிட்டார். நாசமாய்ப் போன துகள் என்பது இதன் பொருள். வசவு வார்த்தை ஒரு நூலின் தலைப்பாக இருக்கக்கூடாது என்று கருதிய நூல் பதிப்பாளர் அதை எர்க் டஹழ்ற்ண்ஸ்ரீப்ங் என்று மாற்றினார். தவிர இத் தலைப்பு மக்களைக் கவருவதாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார். அவர் நினைத்தது சரியாகியது. அப்போதிலிருந்து ஹிக்ஸ் போஸôன் துகளைப் பலரும் கடவுள் துகள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். மற்றபடி ஹிக்ஸ் போஸôன் துகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஹிக்ஸ் போஸôனை "கடவுள் துகள்' என்று வருணிப்பது அபத்தம் என்று தெரிந்தும் பெரும்பாலான மேலை நாட்டு ஊடகங்கள் (இந்தியாவிலும்தான்) கவர்ச்சியான தலைப்புக்காக அச்சொல்லையே பயன்படுத்தின. இதைவிட ஒருபடி மேலே போய், "விஞ்ஞானிகள் கடவுளைக் கண்டனர்' என்று வருணித்த ஊடகங்களும் உண்டு. ஹிக்ஸ் போஸôன்களில் மட்டும் கடவுள் இருப்பதுபோல எண்ணச் செய்வது அசட்டுத்தனமானது. கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று சொல்வதானால் ஹிக்ஸ் போஸôன் என்ன அனைத்துத் துகள்களிலும் கடவுள் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஹிக்ஸ் போஸôனை மட்டும் கடவுள் துகள் என்று வருணிக்க முற்படலாகாது.
 விஞ்ஞானிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் ஹிக்ஸ் போஸôனை கடவுள் துகள் என்று குறிப்பிட்டதில்லை. விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி விஷயங்களில் கடவுளை இழுப்பதே கிடையாது. ஹிக்ஸ் போஸôனுக்கும் இந்தியாவுக்கும் சில தொடர்புகள் உண்டு.
 அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்த சமயத்தில் குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு என்ன பெயர் வைப்பது என்ற பிரச்னை எழுந்தது. இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.
 போஸ் என்பதை போஸôன் என்று மாற்றி அவ்வகைத் துகள்களை போஸôன்கள் என்று அழைக்கலாயினர். சத்யேந்திர நாத் போஸம் ஐன்ஸ்டைனும் சம காலத்தவர். இருவரும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் இயற்பியல் உலகில் முக்கியமானவை. சத்யேந்திர நாத் போஸýக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் புறக்கணிக்கப்பட்டார்.
 ஐரோப்பிய செர்ன் ஆராய்ச்சிக்கூடத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தேவையான ராட்சத காந்தங்களையும் மற்றும் பல கருவிகளையும் இந்தியா தயாரித்தளித்தது. அங்கு சுமார் 100 இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.
 ஹிக்ஸ் போஸôனைக் கண்டுபிடித்ததுடன் இயற்பியலில் ஆராய்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. மேலும் ஆராய்ச்சிகளை நடத்தி ஹிக்ஸ் போஸôன் கண்டுபிடிப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
 தவிர, பிரபஞ்சத்தில் கருப்புப் பொருள், கருப்பு ஆற்றல் என இன்னும் பிடிபடாத விஷயங்கள் உள்ளன. இவை பற்றி நிறைய ஆராய வேண்டியுள்ளது. தவிர, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி விஷயத்தில் எப்போதுமே இத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது என்று திருப்திப்படுவது கிடையாது.
நன்றி 
தினமணி 06 July 2012  
By என். ராமதுரை 

Never-mind School Records--அக்யோ மொரிட்டா (சோனி நிறுவனர்)


சோனி நிறுவனம்
அக்யோ மொரிட்டா


                        இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான்.

                        அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.

சிதைந்துபோன ஜப்பானை சீர்தூக்கிவிட உதவிய அந்த தொழில்பிதாமகனின் தன் முனைப் பூட்டும் கதையை தெரிந்துகொள்வோம்.

                        1921 ஆம் ஆண்டு ஜனவரி 26 ந்தேதி ஜப்பானின் மெஹோயா நகரில் குடும்பத்தின் மூத்த பிள்ளையாக பிறந்தார் மொரிட்டா. 400 ஆண்டுகளுக்கு மேலாக சாக்கே எனப்படும் ஜப்பானிய மதுபானம் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தது அவரது குடும்பம். மொரிட்டாவும் அதே தொழிலை செய்ய வேண்டும் என விரும்பினார் தந்தை அதனால் பள்ளியில் படித்தபோதே மொரிட்டாவை நிறுவன கூட்டங்களில் கலந்துகொள்ளச் செயதார். சிறுவயது முதலே மின்னியல் பொருள்களை அக்கு வேறு ஆணி வேறாக கழட்டி மீண்டும் பொருத்திப் பார்ப்பதில் அலாதி பிரியம் மொரிட்டாவுக்கு. பள்ளியில் கணிதமும் இயற்பியலுல் அவருக்கு மிக பிடித்த பாடங்களாக இருந்தன.

                        பள்ளிபடிப்பை முடித்ததும் ஒசாக்கா இன்டீரியல் பல்கலைகழகத்தில் சேர்ந்து இயற்பியலில் பட்டம் பெற்றார். அதன்பிறகு ஜப்பானிய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றினார். அந்த சமயத்தில் மசார் இபுக்கா என்ற பொருளியல் வல்லுநருடன் நட்பு ஏற்பட்டது. இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் என்ன செய்யலாம் என்று யோசித்தார் மொரிட்டா 14 தலைமுறையாக செய்யபட்டு வந்த தன் குடும்ப தொழிலையே செய்து சவுகரியமான பிரச்சினையில்லாத வாழ்கையை அவர் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆனால் பரம்பரை தொழில் என்றாலும் வளர்ச்சிக்கு இடமில்லாத தொழிலை செய்ய அவருக்கு விருப்பமில்லை. மாறாக உலகத்தையே தன் பக்கமும் ஜப்பான் பக்கமும் திரும்ப வைக்க வேண்டும் என்ற நெருப்பு அவருக்குள் கனன்று கொண்டிருந்தது.

                        1946 ஆம் ஆண்டு மே 7 ந்தேதி தனது கடற்படை நண்பர் இபுக்காவுடன் சேர்ந்து வெறும் 190 ஆயிரம் யென் அதாவது சுமார் 375 டாலர் மூலதனத்தில் 20 ஊழியர்களை கொண்டு டோக்கியோ டெலிகம்யூனிகேஷன்ஸ் கார்ப்ரேஷன்என்ற நிறுவனத்தை தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 25 தான். குண்டுகள் தொலைத்திருந்த ஒரு பாழடைந்த பகுதிவாரி கடைதான் அவர்களின் தொழில் முகவரி. முதல் நாளிலிருந்தே தொழிநுட்ப ஆய்விலும் புதிய பொருள் உருவாக்கத்திலும் இபுக்கா கவணம் செலுத்த, விற்பனை உலகமயமாதல், நிதி, மனிதவளம் ஆகியவற்றில் கவணம் செலுத்தினார் மொரிட்டா.

                        அந்த நிறுவனம் விரைவாக டேப் ரெக்கார்டர் எனப்படும் முதல் ஒலிப்பதிவு கருவியை உருவாக்கியது. ஆனால் அது மிகப்பெரியதாக இருந்ததால் அதை எவரும் வாங்கமாட்டார்கள் என்பது மொரிட்டாவுக்கு புரிந்தது. போருக்கு பிந்திய காலம் என்பதால் அதிகம் பணம் கொடுத்து வாங்கும் நிலையிலும் ஜப்பானியர்கள் இல்லை. உடனே மொரிட்டாவின் மூளை வேலை செய்தது அமெரிக்காவின் பெல் லேப்ஸ் நிறுவனத்திடமிருந்து டிரான்ஸ்சிஸ்டருக்கான உரிமம் பெற்று சட்டைப்பையில் வைக்ககூடிய அளவிலான சிறியதாக வானொலியை உருவாக்கினார். அமெரிக்காவிடமிருந்து பெற்ற தொழில்நுட்பத்தை கொண்டு புதிய பொருளை உருவாக்கி அமெரிக்கர்களுக்கே விற்பனை செய்யும் அந்த திட்டம் கைமேல் பலன் தந்தது.

                        சட்டைப்பை வானொலி அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு காரணம் தரக்கட்டுபாடுக்கு மொரிட்டா கொடுத்த முக்கியத்துவமும் தரக்கட்டுப்பாடுக்கென்றே ஒரு தனித்துறையை உருவாக்கியதுதான். மேலும் தங்கள் பொருள்களுக்கு ஜப்பான் மட்டுமல்ல உலகமே சந்தையாக வேண்டும் என விரும்பினார். அதனால் ஊழியர்களுடன் சேர்ந்து அனைவரும் எளிதில் சொல்லக்கூடிய ஒரு புதிய சொல்லை தேடி அகராதிகளை புரட்டினார்கள். அப்போது அவர்களுக்கு கிடைத்த சொல்தான் சோனஸ். இலத்தீன் மொழியில் சோனஸ் என்றால் ஒலி என்று பொருள் அந்த சொல்லையும் அப்போது அமெரிக்காவில் புகழ் பெற்றிருந்த சானி பாய்ஸ்என்ற இசைக்குழுவின் பெயரையும் இணைத்து 1958 ல் நிறுவனத்தின் பெயரை சோனி(SONY) கார்ப்ரேஷன் என்று மாற்றினார் மொரிட்டா.

                        இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக்காவிலும் நிறுவனக் கிளையை தொடங்கி தன் குடும்பத்துடன் அங்கு குடிபெயர்ந்தார். அதன்பிறகு வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத வித்தியாசமான மின்னியல் பொருட்களை செய்வதில் மொரிட்டா கவணம் செலுத்தினார். அவரது புதிய சிந்தனைகள் புதிய கலாச்சாரங்களையும் புதிய வாழ்க்கை முறைகளையும் உருவாக்கின. உதாரணத்திற்கு தன் பிள்ளைகளோடு சுற்றுலா செல்லும்போது அவர்கள் பெரிய டேப் ரெக்கார்டர் கொண்டு வருவதை கவணித்தார். அதன் அசெளவுகரியம் அவரது சிந்தனையைத் தூண்டியது. போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்லும்படியாக அளவை சுருக்கினால் என்ன என்று சிந்தித்தார். அவரது சிந்தனையில் வாக்மேன் உதித்தது.

                        அந்த முயற்சியில் அவர் ஈடுபட்டிருந்தபோது அவருக்கு நண்பர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? ஒலிவாங்கியை எவன் காதில் மாட்டிக்கொண்டு நடப்பான் உலகம் பைத்தியம் என்று சொல்லும் எனவே அது விற்பனையாகாது என்று ஆரூடம் கூறினர். ஆனால் எதிர்காலத்தையே உருவாக்கும் தைரியம் கொண்ட ஒரு மனிதனை வெறும் ஆரூடங்கள் என்ன செய்துவிட முடியும்.

1976 ஆம் ஆண்டு வாக்மேன் சந்தைக்கு வந்தது. உலகம் முழுவதும் இளையர்களை அது கொள்ளை கொண்டது. பிறகு மொரிட்டாவின் சாம்ராஜ்யம் அசுர வேகத்தில் வளரத் தொடங்கியது. தொலைக்காட்சி, வீடியோ ரெக்கார்டர் என பல மின்னியல் பொருட்களை உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தது சோனி நிறுவனம். மொரிட்டாவின் தலமையில் 1970 ஆம் ஆண்டில் நியூயார்க் பங்கு சந்தையில் இடம்பெற்ற முதல் ஜப்பானிய நிறுவனம் என்ற புகழைப்பெற்றது சோனி. அதன்பிறகு சோனி நிறுவனம் பல்வேறு தொழில்களில் கால்பதித்தது. 2000 ஆண்டு கணக்கெடுப்பின்படி அமெரிக்கர்கள் கொக்கோ-கோலாவை விட சோனியைத்தான் தங்களுக்கு ஆக பிடித்த சின்னமாக தேர்ந்தெடுத்தனர்.

அமெரிக்காவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் SONY என்ற பெயர் பிரபலனமானது. நேரத்தை பொன்போல் கருதி கடுமையாக உழைத்த மொரிட்டா எப்போதுமே சுறுசுறுப்பாக இருப்பார். அவருக்கு 60 வயதானபோது நீர்சருக்கு, ஸ்கூபா முக்குளிப்பு டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளை கற்றுக்கொண்டார். ஓவியத்தையும் இசையையும் அதிகம் நேசித்தார். மொரிட்டாவுக்கு 72 வயதானபோது ஒருநாள் காலை டென்னிஸ் விளையாடி கொண்டிருந்தபோது வாதம் ஏற்பட்டது உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் எல்லா பொருப்புகளிலிருந்தும் விலகினார்.

மொரிட்டாவுக்கு அடுத்து சோனி நிறுவனத்தின் தலைமை பொறுப்பை ஏற்றவர் யார் தெரியுமா? மொரிட்டாவின் நிறுவனம் முதன்முதலில் தயாரித்து வெளியிட்ட டேப் ரெக்கார்டர் தரம் குறைவாக உள்ளது என்று குறைகூறி கடிதம் எழுதிய நொரியோ ஓஹா என்பவர். குறை கண்டவரிடமே நிறை கண்டு அவரை உடனடியாக தன் நிறுவனத்தில் சேர்த்து கொண்டு பாதுகாத்து வளர்த்து பின்னர் அவரிடமே தன் தலைமை நிறுவன பொறுப்பை ஒப்படைத்தார் தொலைநோக்கு கொண்ட மொரிட்டா.

தரம் தான் நிரந்தரம் என்பதை உலகுக்கு உணர்த்திய அக்யோ மொரிட்டா 1999 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ந்தேதி தனது 78 ஆவது வயதில் டோக்கியோவில் காலமானார். அவர் இறந்தபோது பாக்ஸ் சஞ்சிகையில் உலக பணக்காரர் பட்டியலில் அவருக்கு 386 ஆவது இடம் கிடைத்தது. அப்போது அவரின் சொத்தின் மதிப்பு 1300 மில்லியன் டாலர். டைம் சஞ்சிகை வெளியிட்ட 20 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த தொழில் முனைவரின் பட்டியலில் அமெரிக்கர் அல்லாத ஒரே ஒருவர் அக்யோ மொரிட்டாதான்.

உலகமய தொழில்துறைக்கு அவர் ஆற்றிய பங்கை அங்கீகரிக்கும் வகையில் இங்கிலாந்தின் மிக உயரிய ஆல்பர்ட் விருது ஃப்ரான்ஸின் ஆக உயரிய லெஜெண்ட் ஆப் ஹானர் விருது, ஜப்பானிய மன்னரின் பர்ஸ்ட் க்ளாஸ் ஆர்டர் ஆகிய விருதுகளும் இன்னும் பல எண்ணிலடங்கா விருதுகளும் அவரை நாடி வந்திருக்கின்றன. அந்த தொழில் பிரம்மாவின் கதையை முழுமையாக தெரிந்துகொள்ள வேண்டுமா? Made in japan என்ற அவரது சுயசரிதையை படித்துப்பாருங்கள்.

1966 ஆம் ஆண்டில் அவர் Never-mind School Records என்ற இன்னொரு புகழ்பெற்ற நூலையும் எழுதினார். அதில் வாழ்க்கையிலும் தொழிலிலும் வெற்றிப்பெற பள்ளியில் வாங்கும் மதிப்பெண்கள் முக்கியம் அல்ல என்று வாதிடுகிறார். அதாவது ஆர்வம்தான் படைப்புத்திறனுக்கான திறவுகோல் என்பது மொரிட்டா நமக்கு விட்டு சென்றிருக்கும் உன்னதமான பொன்மொழி

வால்மார்ட் வருகை நாட்டிற்கு வளம் சேர்க்குமா?


வால்மார்ட் வருகை இந்தியாவிற்கு பாதகமா சாதகமா என்பது பற்றிய ஒரு பார்வை !!

சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடுஎன்பது கடந்த சில ஆண்டுகளாகவே பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சில்லறைவணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில் வால்மார்ட், கேர்போர், மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து சில்லறைவணிகத்தில் ஈடுபட முடியும். இந்நிறுவனங்கள் நம்மூர் கடைகளை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை. இந்த சில்லறைவணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழையும்போது தற்போது இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.

சில்லறைவணிகம் (Retail Industry) இரண்டு பிரிவுகளாக உள்ளன. முறையாக லைசன்ஸ் பெற்று, விற்பனை வரி, வருமான வரி போன்றஅனைத்து வகை வரிகளையும் கட்டும் வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்டவை (Organized) என்றும் மேற்குறிப்பிட்ட எந்தவகை வரிகளையும் செலுத்தாத வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாதவை (UnOrganized) என்றும் இரண்டு பிரிவுகளாக உள்ளன.

இந்தியாவில் மொத்த சில்லறைவணிகத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் தான் முதல் வகையைச் சார்ந்தவை. எஞ்சிய 97 சதவீதம் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட சில்லறைவணிகம் 70 முதல் 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
விற்பனை ரீதியில் சில்லறைவணிக நிறுவனங்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்றுசிங்கள் பிராண்ட்சில்லறைவணிகம். இதற்கு நோக்கியா ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் ஒரே ஒரு பிராண்ட் செல்போன் மட்டும் விற்பனை செய்யப்படும். மற்றொன்று மல்ட்டி பிராண்ட்சில்லறை வணிகம். இதற்கு யுனிவர்செல் ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் பல கம்பெனி பிராண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்படும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டமானது இந்த இரண்டு வகையான சில்லறைவணிகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘சிங்கள் பிராண்ட்சில்லறைவணிகத்தில் 51% முதல் 100% வரையிலும், ‘மல்ட்டி பிராண்ட்சில்லறை வணிகத்தில் 51% வரையிலும் அன்னிய முதலீட்டை உயர்த்தியிருக்கிறது இந்த சட்டம் திருத்தம்.

இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இனி வால்மார்ட், டெஸ்கோ, பிளாக்பெர்ரி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யும். அன்னிய முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டு வருவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இடைத்தரகர்களை விலக்கப்படுவதால் விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும், இதன் காரணமாக வேளாண் உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் இதற்கு ஆதரவாக கூறப்படுகின்றது.
அதே நேரத்தில் சில்லறைவணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் மளிகை பொருள்களை வாங்கும் அண்ணாச்சிக்கடைகளும் பெட்டிக்கடைகளும் காணமால் போய், சில்லறை வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் உள்ளூர் வியாபாரிகளுக்கு கிடைக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போய்விடும் அபாய நிலையும் தோன்றியுள்ளது.

இந்தியா பல தரப்பட்ட மக்களை கொண்டதொரு தேசம். பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் நடுத்தர வர்கத்தினராகவும் இருக்கின்றனர். இவர்கள் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்காமல் அன்றைக்குத் தேவையாக மளிகை பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். உதாரணமாக 50 மில்லி நல்லெண்ணையும் 2 ரூபாய்க்கு தேங்காய் சில்லும் 50 பைசாவுக்கு பச்சை மிளகாயும் வாங்குவார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்ற சிறுவணிகர்களால்தான் முடியும். அவசர தேவைக்கு கடனாகவும், மாதத் தவணையில் பொருள்கள் வாங்கும் வசதியும் இல்லாததும்தான்.

ரிலையன்ஸ், டாட்டா மற்றும் பிர்லா போன்றநிறுவனங்கள் முன்னமே இந்த துறையில் இருக்கின்றனவே, இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு மக்கள் பயப்படுகிறார்கள்?’ என்றகேள்வி எழும். ரிலையன்ஸ், டாட்டா போன்ற நிறுவனங்களுக்கு சில்லறைவணிகம் பிரதானமான தொழில் அல்ல. அவர்கள் நடத்தும் பலவகையான தொழில்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்.
ஆனால் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கும் Walmart,Carefour,Tesco போன்றவெளிநாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முதன்மையான தொழில் ஆகும். எனவே மிகத் தெளிவாக திட்டமிட்டு களத்தில் இறங்குவார்கள். இதனால் தற்போதைய சிறு வணிகர்கள் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிழைப்புக்காக வேறு தொழில் தேட வேண்டியிருக்கும். தொழிலை விட இயலாதவர்கள் வேறு வழியில்லாமல் நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும்.

சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகள் ஒழிக்கப்பட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வரும் என்று மறுபுறம் அச்சமும் தோன்றியுள்ளது. ஒருவகையில் இந்த அச்சம் நியாயமானதாகக் கூட தோன்றுகிறது. காரணம் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராகத்தான் இருக்கிறது. எனவே, பண்ணை விவசாயம் வந்தால் சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.

மக்களுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்றகருத்தும் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவாக சொல்லப்படுகிறது. மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏந்தியிருக்கும் ஆயுதம். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று ஏற்கனவே அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட்.
வால்மார்ட்

இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்ற சாம்வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்றபலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்றகடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையைவிட மலிவாகவும் விற்று வந்தது இந்த வால்மார்ட்.
சாம்வால்டன் இரண்டு வகையான வியாபார நுணுக்கத்தை கையாண்டார். ஓன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பது. மற்றொன்று உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் பொருட்களை கொள்முதல் செய்வது. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட்.

1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்களில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி அசுர வளர்ச்சியடைந்தது. இந்த காலகட்டத்தில் தோன்றிய உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது. 1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பல நாடுகளில் சில்லறைவணிகத்தில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.

அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35% வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%. ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது வால்மார்ட். அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்றபல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% முதல் 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன. தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. மாறாக அதே மாதிரி பொருட்கள் வேறு நிறுவனத்திடமிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ பெறப்படும்.
பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் அதிகரிக்க முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ரப்பர் மெய்ட். ஆனால் வால்மார்ட் விலை உயர்வுக்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி. போன்று விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து பல லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்