நம்
உடலில்
அதிக
அளவு டிரைகிளிசரைடுகள்
இரத்த
ஓட்டத்தில்
இருப்பது
தமனித்
தடிப்பினை
உண்டாக்கவும்,
இதன்
விளைவாக
இதயத்தமனி
நோய்க்கும்,
வாதத்திற்கும்
அடிகோலுகின்றன
டிரைகிளிசரைடு
அளவுகளைக் குறைத்தல்
அதிக
அளவு மாவுப் பொருள்களைக்கொண்ட
உணவுகளை உட்கொள்ளும்போதும்,
மொத்த
சக்தி
கொள்ளவுகளில் அறுபது
சதவிகிதத்திற்கும் மேல்
மாவுப் பொருள்களின்
பங்கு
இருக்கும்போதும் டிரைகிளிசரைடு
அளவுகள் அதிகரிக்கின்றன.
பரும
எண் (BMI;
28+) இருபத்தியெட்டிற்கும்
அதிகமாக உள்ளவர்களில்,
டிரைகிளிசரைடு
அளவுகளுக்கும்
இன்சுலின்
எதிர்பிற்கும்
உள்ள வலுவான தொடர்பானது (எடை
கூடுதலாக உள்ளவர்களிலும்,
பருமனாக
உள்ளவர்களிலும் பொதுவாகக்
காணப்படுவது)
மாவுப்பொருள்களால்
தூண்டப்படும்
உயர்இரத்த டிரைகிளிசரைடு
அளவுகளுக்கு முதன்மை காரணியாக
உள்ளதாகக்
கருதப்படுகின்றது.
அதிக
அளவு
மாவுப்பொருள்களை
சாப்பிடுவது
சர்க்கரை
உயர்த்தல் குறியீட்டினை
அதிகரிக்கிறது.
இந்நிலையானது,
பெண்களின்
அதிக
இன்சுலின்
உற்பத்திக்கும்,
டிரைகிளிசரைடு
அளவுகள் அதிகமாவதற்கும்
காரணமாகிறது.
அதிக
அளவு
மாவுப்பொருள்களை
சாப்பிடுவதால்
ஏற்படும் (டிரைகிளிசரைடு
அளவுகள் அதிகமாவதையும்
சேர்த்து)
பாதகமான
மாற்றங்கள்
ஆண்களைக்
காட்டிலும்
பெண்களுக்கு இதயநோய் வருவதற்கான
உறுதியான இடர்காரணிகளாகக்
கண்டறியப்பட்டுள்ளது.
உடற்பயிற்சியின்
மூலமாகவும்,
மீன்,
ஆளிவ் விதை
எண்ணெய் மற்றும் பிற மூலங்களிலுள்ள
ஒமேகா-3
கொழுப்பு
அமிலங்களை
உட்கொள்வதன்
மூலமாகவும் டிரைகிளிசரைடு
அளவுகளைக் குறைக்கலாம்.
கார்னிதின்
இரத்த
டிரைகிளிசரைடு
அளவுகளைக் குறைக்கும் ஆற்றலைக்
கொண்டது.
சில
தருணங்களில் நீர்-கொழுப்பு
நாட்டமுள்ள ஃபைப்ரேட்டுக்களைப்
பயன்படுத்தி
டிரைகிளிசரைடு
அளவுகள் குறிப்பிடத்தக்க
அளவு குறைக்கப்பட்டுள்ளன.
அதிக
அளவு மது அருந்துவது டிரைகிளிசரைடு
அளவுகளை அதிகரிக்கச் செய்யும்.
No comments:
Post a Comment