Friday, 17 May 2013

கடவுள் துகள்


விஞ்ஞானிகள் கண்டுபிடித்த "கடவுள் இல்லாத' துகள்

By என். ராமதுரை
First Published : 06 July 2012 02:32 AM IST
அணுவைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற துகள்களால் ஆனது என்று சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்னரே ரூதர்போர்ட் என்ற விஞ்ஞானி கண்டுபிடித்துக் கூறினார்.
 அதன் பிறகு விஞ்ஞானிகள் அணுவை மேலும் மேலும் ஆழ்ந்து ஆராயத் தொடங்கினர். இதன் பலனாக துகள் இயற்பியல் என்ற தனித் துறை உருவாகியது. அடிப்படையான துகள்கள் யாவை என்று தொடர்ந்து ஆராய முற்பட்டபோது மொத்தம் 16 துகள்களே அடிப்படையான துகள்கள் என்று கண்டறியப்பட்டது. கல், மண்,பேனா, பென்சில், கார், விமானம், பூமி, சூரியன், நட்சத்திரங்கள், அண்டங்கள் இப்படியாக அனைத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் இந்த 16 துகள்கள்தான் அடிப்படை.
 இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். இயற்பியல் துறையில் இரு வகையான விஞ்ஞானிகள் உண்டு. ஒரு வகை விஞ்ஞானிகள் காகிதம் பென்சில் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தி தங்கள் சிந்தனை ஆற்றல் மூலம் இது இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படியான துகள் இருந்தாக வேண்டும் என்று கூறுபவர்கள். இவர்களை கொள்கை விஞ்ஞானிகள் என்று வருணிக்கலாம். இவர்கள் கூறியவை சரிதானா என்று பரிசோதனைகள் மூலம் ஆராயும் விஞ்ஞானிகள் இன்னொரு வகை. ஐன்ஸ்டீன் முதல் வகையைச் சேர்ந்தவர். =ஙஇ 2 என்பது முதல் அவர் கூறிய பல கொள்கைகள் சரியே என்று பின்னர் பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டன.
 அடிப்படைத் துகள்கள் 16 என்று சொல்லப்பட்டதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் எடின்பரோ பல்கலைக்கழத்தைச் சேர்ந்த பீட்டர் ஹிக்ஸ் என்ற விஞ்ஞானியும் அவர் போலவே மேலும் சில விஞ்ஞானிகளும் இன்னொரு முக்கியமான துகள் இருந்தாக வேண்டுமே என்று 1964-ஆம் ஆண்டு வாக்கில் கூறினர். விஞ்ஞானி ஹிக்ஸ் கூறிய துகள் போஸôன் என்ற வகையைச் சேர்ந்தது. அதுவரை அறியப்படாத அத் துகளுக்கு ஹிக்ஸ் போஸôன் என்று பெயர் வைக்கப்பட்டது. அதாவது ஹிக்ஸ் கூறிய வகையைச் சேர்ந்த போஸôன் என்பது அதன் பொருள். இந்த போஸôனை எங்கே தேடுவது? பொதுவில் போஸôன் வகைத் துகள்கள் அல்பாயுசு கொண்டவை. தோன்றிய சில கணங்களில் வேறு வகைத் துகளாகி விடும்.
 ஹிக்ஸ் தாம் குறிப்பிட்ட போஸôன் துகள் பற்றி ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லி வைத்தார். அதாவது எல்லா அடிப்படைத் துகள்களும் வெவ்வேறு அளவில் நிறை (ஙஹள்ள்) கொண்டவை. நிறை வேறு எடை என்பது வேறு என்றாலும் எளிதில் புரிந்து கொள்ள நிறை என்பதை எடை என்றும் சொல்லலாம். 16 அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு ஹிக்ஸ் போஸôன் தான் காரணம் என்று அவர் சொன்னார். ஆகவே ஹிக்ஸ் போஸôனைக் கண்டுபிடிப்பது மிக அவசியமாகியது. தவிர, அணு முதல் அண்டம் வரையிலான அனைத்தையும் விளக்கும் வகையில் விஞ்ஞானிகள் கடந்த பல ஆண்டுகளில் பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு என்ற ஒட்டுமொத்தக் கொள்கையை உருவாக்கியுள்ளனர். ஆங்கிலத்தில் இதை நற்ஹய்க்ஹழ்க் ஙர்க்ங்ப் என்று கூறுவர். ஹிக்ஸ் போஸôனைக் கண்டுபிடிக்காவிட்டால் இக் கொள்கையில் பெரிய ஓட்டை இருப்பதாகி விடும். ஆகவேதான் ஹிக்ஸ் போஸôனைத் தேடுவது முக்கிய விஷயமாகியது.
 ஹிக்ஸ் போஸôனை எங்கே கண்டுபிடிப்பது? இங்கு ஐன்ஸ்டீன் உதவிக்கு வருகிறார். பொருளை ஆற்றலாக மாற்றலாம். அதேபோல ஆற்றலையும் பொருளாக மாற்றலாம். ஐன்ஸ்டீனின் =ஙஇ 2 என்ற கொள்கையின் அர்த்தமே அதுதான். ஆகவே பெரும் ஆற்றலைத் தோற்றுவிக்கும் போது நுண்ணிய துகள் வடிவில் பொருள் தோன்றும். உதாரணமாக, புரோட்டான்களைப் பயங்கர வேகத்தில் ஒன்றோடு ஒன்று மோதவிட்டால் பெரும் ஆற்றல் தோன்றும். அப்போது தோன்றும் நுண்ணிய துகள்களை ஆராய்ந்தால் அவற்றில் ஹிக்ஸ் போஸôன் தட்டுப்படலாம்.
 துகள்களை இப்படி மோத விடும் ஆராய்ச்சியை விஞ்ஞானிகள் நீண்ட காலமாகவே செய்து வருகிறார்கள். ஆரம்ப காலத்தில் இது ஆட்டுக் கிடா சண்டைபோல சிறிய அளவில் இருந்து பின்னர் டைனோசார்களை மோத விடுவதைப்போன்ற அளவுக்குப் பெரிதாக வளர்ந்தது. அமெரிக்காவில் இருந்து வந்த பெர்மிலாப் என்ற துகள் மோதல் ஆராய்ச்சிக் கூடம் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் ஒன்று சேர்ந்து ஜெனீவா நகருக்கு அருகே பாதாளத்தில் பிரம்மாண்டமான துகள் மோதல் ஆராய்ச்சிக்கூடத்தை நிறுவியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பெர்மிலாப் அண்மையில் மூடப்பட்டது.
 ஜெனீவா அருகே அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சிக்கூடம் சுருக்கமாக செர்ன் (இஉதச) என்று அழைக்கப்படுகிறது. இங்கு 100 மீட்டர் ஆழத்தில் புரோட்டான்களை மோத விடும் ஆராய்ச்சிக் கூடம் உள்ளது. குதிரைப் பந்தய மைதானம்போல இது வட்ட வடிவில் உள்ளது. இங்கு வலுவான காந்தக் கட்டைகளைப் பயன்படுத்தி புரோட்டான்களை விரட்டோ விரட்டு என்று விரட்டுவார்கள். இரு புறங்களிலும் ஆட்கள் நின்று கொண்டு ஒரு குதிரையை மாறி மாறி சவுக்கால் அடித்தால் அது மேலும் மேலும் வேகமாக ஓடும். புரோட்டான்கள் அதுபோல விரட்டப்படுகின்றன. 27 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் விசேஷ சூழ்நிலைகளில் புரோட்டான்கள் கிட்டத்தட்ட ஒளி வேகத்தில் பாய்ந்து செல்லும் வகையில் விரட்டப்படும். அதேசமயத்தில் எதிர்ப்புறத்திலிருந்து இதே வேகத்தில் புரோட்டான்கள் பாய்ந்து வரும். எதிரும் புதிருமாக அதி வேகத்தில் வருகின்ற இந்தப் புரோட்டான்கள் ஒரு கட்டத்தில் ஒன்றோடு ஒன்று மோதும்படி செய்யப்படும். பல கோடி புரோட்டான்கள் இவ்விதம் ஒன்றோடு ஒன்று மோதும். அப்போது கம்பி மத்தாப்பிலிருந்து பொறிகள் வெளிப்படுவதைப் போல ஒளிக் கீற்றுகள் பறக்கும். பயங்கர மோதலின் விளைவாக பெரும் ஆற்றல் வெளிப்படும். ஆற்றல் துகள்களாக மாறலாம் என்ற கொள்கையின்படி பல துகள்கள் நாலா புறங்களிலும் பாயும். இவற்றில் பலவும் அல்பாயுசாக உடனே வேறு துகள்களாக மாறும்.
 இந்த மோதல்களின்போது தோன்றும் விளைவுகளை மிக நுட்பமான கேமராக்கள் படம் எடுக்கும். அப்படங்களை விஞ்ஞானிகள் நுணுக்கமாக ஆராய்வர். ஜெனீவா ஆராய்ச்சிக்கூடத்தில் கடந்த பல மாதங்களாக விஞ்ஞானிகள் ஹிக்ஸ் போஸôன்கள் தொடர்பாக மிகத் தீவிரமாகப் பரிசோதனைகளை நடத்தி புதன்கிழமையன்று முடிவுகளை அறிவித்தனர். இதுவரை இல்லாத அளவுக்குப் பெரும் ஆற்றலைத் தோற்றுவித்ததால் இப்போதைய பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸôன்கள் தட்டுப்பட்டதாகக் கருதப்படுகிறது.
 ஹிக்ஸ் போஸôன்கள் என்று சொல்லத்தக்க துகளைக் கண்டுபிடித்து விட்டோம் என்று தோன்றுகிறது என்று விஞ்ஞானிகள் குழுவினர் மிக ஜாக்கிரதையாக அறிவிப்பு வெளியிட்டனர். பரிசோதனைகளில் ஹிக்ஸ் போஸôன் சில கணங்களில் வேறு துகளாக மாறினாலும் ஹிக்ஸ் போஸôன் எவ்விதமான துகள்களாக மாறும் என்பது விஞ்ஞானிகளுக்குத் தெரியும். உருமாறிய போஸôன்கள் அவ்விதத் தன்மைகளைக் காட்டியதால் அவர்கள் கண்டுபிடித்தது ஹிக்ஸ் போஸôன்களே என்று கருதப்படுகிறது. இக்கண்டுபிடிப்பு மிக மகத்தானது என்றே சொல்ல வேண்டும்.
 ஹிக்ஸ் போஸôன் கண்டுபிடிப்பு பற்றிய செய்தி வெளியான உடனேயே மேற்கத்திய பத்திரிகைகளும் டிவி சேனல்களும் "கடவுள் துகள்' கண்டுபிடிக்கப்பட்டு விட்டது என்று பரபரப்பாக செய்தி வெளியிட்டன. இதில் கடவுள் எங்கே வந்தார்?
 ஹிக்ஸ் போஸôன் பற்றி ஒரு சமயம் பிரபல விஞ்ஞானி ஒரு நூலை வெளியிட்டார். இத்துகள் விஞ்ஞானிகளை அலைக்கழிப்பதை அவர் மனதில் கொண்டு எரிச்சலுடன் தமது நூலுக்கு எர்க்க்ஹம்ய் ல்ஹழ்ற்ண்ஸ்ரீப்ங் என்று தலைப்பிட்டார். நாசமாய்ப் போன துகள் என்பது இதன் பொருள். வசவு வார்த்தை ஒரு நூலின் தலைப்பாக இருக்கக்கூடாது என்று கருதிய நூல் பதிப்பாளர் அதை எர்க் டஹழ்ற்ண்ஸ்ரீப்ங் என்று மாற்றினார். தவிர இத் தலைப்பு மக்களைக் கவருவதாக இருக்கும் என்றும் அவர் நினைத்தார். அவர் நினைத்தது சரியாகியது. அப்போதிலிருந்து ஹிக்ஸ் போஸôன் துகளைப் பலரும் கடவுள் துகள் என்றே குறிப்பிட ஆரம்பித்தனர். மற்றபடி ஹிக்ஸ் போஸôன் துகளுக்கும் கடவுளுக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. ஹிக்ஸ் போஸôனை "கடவுள் துகள்' என்று வருணிப்பது அபத்தம் என்று தெரிந்தும் பெரும்பாலான மேலை நாட்டு ஊடகங்கள் (இந்தியாவிலும்தான்) கவர்ச்சியான தலைப்புக்காக அச்சொல்லையே பயன்படுத்தின. இதைவிட ஒருபடி மேலே போய், "விஞ்ஞானிகள் கடவுளைக் கண்டனர்' என்று வருணித்த ஊடகங்களும் உண்டு. ஹிக்ஸ் போஸôன்களில் மட்டும் கடவுள் இருப்பதுபோல எண்ணச் செய்வது அசட்டுத்தனமானது. கடவுள் தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்று சொல்வதானால் ஹிக்ஸ் போஸôன் என்ன அனைத்துத் துகள்களிலும் கடவுள் இருப்பதாக ஒப்புக் கொள்ள வேண்டும். ஹிக்ஸ் போஸôனை மட்டும் கடவுள் துகள் என்று வருணிக்க முற்படலாகாது.
 விஞ்ஞானிகளைப் பொருத்தமட்டில் அவர்கள் ஒருபோதும் ஹிக்ஸ் போஸôனை கடவுள் துகள் என்று குறிப்பிட்டதில்லை. விஞ்ஞானிகள் தங்களது ஆராய்ச்சி விஷயங்களில் கடவுளை இழுப்பதே கிடையாது. ஹிக்ஸ் போஸôனுக்கும் இந்தியாவுக்கும் சில தொடர்புகள் உண்டு.
 அடிப்படைத் துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டு வந்த சமயத்தில் குறிப்பிட்ட வகைத் துகள்களுக்கு என்ன பெயர் வைப்பது என்ற பிரச்னை எழுந்தது. இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் பெயரை வைக்க முடிவு செய்யப்பட்டது.
 போஸ் என்பதை போஸôன் என்று மாற்றி அவ்வகைத் துகள்களை போஸôன்கள் என்று அழைக்கலாயினர். சத்யேந்திர நாத் போஸம் ஐன்ஸ்டைனும் சம காலத்தவர். இருவரும் சேர்ந்து எழுதிய கட்டுரைகள் இயற்பியல் உலகில் முக்கியமானவை. சத்யேந்திர நாத் போஸýக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர் புறக்கணிக்கப்பட்டார்.
 ஐரோப்பிய செர்ன் ஆராய்ச்சிக்கூடத்துக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு உண்டு. இந்த ஆராய்ச்சிக்கூடத்துக்குத் தேவையான ராட்சத காந்தங்களையும் மற்றும் பல கருவிகளையும் இந்தியா தயாரித்தளித்தது. அங்கு சுமார் 100 இந்திய விஞ்ஞானிகள் பணியாற்றுகின்றனர்.
 ஹிக்ஸ் போஸôனைக் கண்டுபிடித்ததுடன் இயற்பியலில் ஆராய்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. மேலும் ஆராய்ச்சிகளை நடத்தி ஹிக்ஸ் போஸôன் கண்டுபிடிப்பை உறுதி செய்ய வேண்டியுள்ளது.
 தவிர, பிரபஞ்சத்தில் கருப்புப் பொருள், கருப்பு ஆற்றல் என இன்னும் பிடிபடாத விஷயங்கள் உள்ளன. இவை பற்றி நிறைய ஆராய வேண்டியுள்ளது. தவிர, விஞ்ஞானிகள் ஆராய்ச்சி விஷயத்தில் எப்போதுமே இத்துடன் எல்லாம் முடிவடைந்து விட்டது என்று திருப்திப்படுவது கிடையாது.

Friday, 3 May 2013

கண்ணாடி பயிற்சி

                             அறிவியல் இல்லாது வேதாத்திரியம் இல்லை. இவ்விளக்கங்களிலும் இவ்வுண்மையே வெளிப்படுகின்றது.

                              எந்த ஒரு பொருளிலே நாம் காந்தத்தைக் குவிக்க வேண்டியிருப்பினும், அப்பொருள் அங்கே எந்திரம் எனும் நிலைக்கு உயர்த்தப்பட்டு விடுகின்றது.
எந்திரம் என்பதைக் உன்னித்துக் காணும் போது நிகழும் காந்தச் சேகரிப்பு மிகுதியால், மனம் நடு மன நிலைக்கு [உயிர் மீது நிலைத்தல்] தானாகவே நகரவல்லது. நடு மனத்துக்கு நகர்த்த வல்ல, காந்தச் சேகரிப்புக்கு உறுதுணையாய் அமைய வல்ல ஒரு ஊடகத்தை கவனமாக பராமரித்தல் அவசியம்.

                              நமது முறையிலே கண்ணாடித்தவம் என்பது இராமலிங்கர், நமது மஹானுக்கு சூக்குமமாக உணர்த்திய தந்திரங்களில் ஒன்றாகும். இராமலிங்கர் தான் சிறுவனாக இருந்த போது படிப்பிலே கவனம் செலுத்தாமையால், தம் மூத்த அண்ணணுடன் பிணக்குற்று, வீட்டின் ஒரு அறையில் மட்டுமே தங்கி, அண்ணன் வரும் போது அவர் எதிரே வராத வண்ணம் இருந்து வந்தார். அந்த அறையிலே தனியாய் அமர்ந்து அண்ணனிடம் தன்னை நிரூபித்துக் கொள்வதற்காக பாடங்களில் கவனத்தை ஊன்றிக்கொண்டிருந்தார் என்று அவரது குடும்பமே நம்பிக்கொண்டிருந்த போது, அவரோ, அங்கு ஒரு கண்ணாடியை நிறுவி, அதற்கு சாம்பிராணி யிட்டு, அதை பலமணி நேரம் உன்னிப்பாகப் பார்த்துகொண்டிருந்தார். அவ்வாறு பார்த்துக் கொண்டே முருகக்கடவுளை நோக்கி பிரார்த்தித்துக் கொண்டிருக்கையில், அவரது மனமே முருகனாய் நின்று பின் அவரதுமனவுருவமே அக்கண்ணாடியில் அவருக்கு பிரசன்னமானது. மேலும் இவ்வாறு பல மணி நேரம் கண்ணாடிப் பயிற்சியில் ஈடுபட்டதும், அவரது சீவகாந்தம் காலத்தால் திணிவில் மிகுந்து, ஒளி எனும் காந்தத் தன்மாத்திரையாக மாற்றமடைந்து, 'ஒளியுடலார்' எனும் பெயரை அவர் பெறக்காரணமாயிற்று.

                              1. காந்தகச் சேகரிப்பு எந்திரத்தின் உதவியால் மிகுந்து சீவகாந்தப் பெருக்கம் ஏற்படும். பெருக்க மிகுதியால் காந்தம் தன்னுடைய தன்மாத்திரையில் உயர்ந்து ஒளியாகக் கூடத் தோற்றமளிக்கலாம், அதுவும் சாத்தியமே நமக்கு.

                              2. காந்தச் சேகரிப்பு, உயிர் உணர்தலை, உயிர் அறிதலாக, உயிர்கலத்தலாக மாற்ற வல்லது. இந்த நிலையிலே மனம் 14-40 அலை நிலையிலிருந்து 7-14 அலை நிலைக்குள் தானாகவே வழுக்கி உட்புகுந்து விடும். இந்த நிலையில் மனம் எதை நினைக்கின்றதோ அதுவாகவே மாற்றமடையும், நாம் கண்ணாடியில் நமது பிம்பத்தை நம் மனம் முழுக்க நிறைந்த மகானது வடிவமாகவே காணலாம், இதுவும் நிகழும்.

                              1. எந்திரத்தின் பயன்: ஒரு பொருள் இருக்கின்றதென்றால், அதைப் பார்க்கும் போது அதன் பயன்பாடுதான் நம் மனதில் ஓடவேண்டும். ஒரு ஆடை இருக்கின்றது, அதைக் காணும் போது அதன் பயன் உடலை காப்பதே எனும் எண்ணம் தான் எழவேண்டுமேயன்றி, என்ன அழகாக பளபளப்பாக இருக்கின்றது இந்தச் சேலை, எனும் எண்ணம் நம் மனதில் ஓடினால் அது சரியா? அது போலத்தான், கண்ணாடித்தவத்துக்கு வைக்கும் கண்ணாடியைப் பார்க்கும் போது அதன் பயன்பாடு மட்டுமே நம் மனதில் எழவேண்டும். அதற்கு கலர் கலராக ஃபிரேம் செய்து வைத்தால், அதைப் பார்க்கும் போது அந்தக் கலர்தான் மனதில் ஓடுமேயன்றி கண்ணாடியின் பயன் பற்றிய எண்ண அலை நம் மனதில் எழுமா? முதல் தேவை எளிமை மற்றும் பயன்பாடு குறித்த சிந்தனையாலமைந்த அமைந்த தேர்வு.

                              2. சூக்கும சரீரத்தின் அளவு: உங்களது துவாதசாங்கம் என்பது ஒரு ஒன்றரை அடி அளவுக்கு துரியத்திலிருந்து உயர்ந்து நிற்க வல்லது, துவாத சாங்கத்தில் தங்கும் காந்தமும் கண்ணாடியில் பட்டுப் பிரதிபலிக்க வேண்டுமல்லவா, அதனாலே வாங்கிய கண்ணாடி உடலையும், உடலினின்று ஒரு ஒன்றரை அடியளவையும் காட்டவல்லதாய் இருப்பதே நலம். இல்லாவிடில் காந்த மிகுந்த நிலையில் கண்ணாடியின் பயன் கேள்விக்குறியாகிவிட வல்லது.

                              3. எந்திரத் தூய்மை: உடற் தூய்மை, உள்ளத்துக்கு புத்துணர்வை அளிக்கவல்லது. எந்த ஒரு எந்திரத்தின் தூய்மையும் அதை பயன்படுத்துவோருக்கு பயிற்சியில் ஆழ ஊக்குவிப்பாய் அமைய வல்லது. ஆகவே, கண்ணாடியை தூய்மையாய் வைத்திருத்தல் அவசியம்.

                              4. எந்திரக்குக் காப்பு: காந்தம் குவிக்கும் பொருள் எதுவாயினும், அதை அவசியப்படாதோர் எண்ண அலைகளிலிருந்து புறமாக வைப்பதே நல்லது. அந்த விதத்தில் இந்தக்கண்ணாடியை நடு வீட்டில் ஃபிரேம் செய்து மாட்டலாகாது. அதை எடுக்கும் போதும் அருட்காப்பு அவசியம்  வைக்கும் போதும் அருட்காப்பிடுதல் நலம்.

                              5. எந்திரத்தில் குவிப்பு: காந்தம் கையில் மிகுதியாக சேகரிப்படைந்த நிலையில், அது தானாய் வெளியேறி ஓடாத வண்ணம், மஹான் கையுறை அணியும் பழக்கத்தைக் கொண்டிருந்தது போன்று, காந்தம் மிகுதியாக உங்கள் கண்ணாடியில் சேகரிப்படைந்த நிலையில், அதற்கு உறையிடுதலே நலம். அது குவிந்த காந்தத்தை இழப்பின்றி தேக்கி வைக்க வல்லது.

                              6. குறித்த காலம்: நமது காந்தக் களம் எல்லா நேரங்களிலும் தூய்மையாக அமைய வல்லது. எனினும் கண்ணாடி எனும் எந்திரம் நமது காந்தக் களத்தை மட்டுமே பிரதிபலிப்பதில்லை. அது நம்மைச் சுற்றியுள்ள வான் காந்தக் களத்தையும் [புவியை ஒட்டிய பகுதி] பிரதிபலிப்ப தால், அந்தக் களம் எந்த நேரத்தில் தூய்மையாக இருக்கின்றதோ, அந்த நேரத்திலேதான் கண்ணாடியை இட்ட உறையினின்று வெளியே எடுத்து நம் பயிற்சியைத் துவக்க வேண்டும். அதாவது கண்ணாடிப் பயிற்சி எனும் தந்திரம், பிரும்ம முகூர்த்தில் மட்டுமே செய்யப் பட வேண்டியது. மற்ற நேரங்களில் அந்த எந்திரத்தை எதையும் பிரதிபலிக்கா வண்ணம் சுவரை நோக்கியதாய் உறையிட்டு வைத்தலே நலம்.

கடைசியாக,
                              7. கண்ணாடி வாங்கியது எதற்கு? புதுசா நிறைய காசுகுடுத்து செருப்பு வாங்கிருக்கேன் சார், அதனால தான் சார், நான் அதை காலிலே அணியாது கையிலே வைத்துக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கின்றேன் என்பது போன்று சில பேர், கண்ணாடி தவம் செய்ய கண்ணாடி வாங்கிருக்கேன் சார், பரணிலேயே வைத்துப் பூட்டியிருக்கின்றேன், எதோ அது பெரிய எந்திரமாம், பத்திரமாய் வைக்கணுமாம், என்ற நினைப்பிலே அதைப் பயன்படுத்தாமலேயே வைத்திருப்பது, விலையுயர்ந்த செருப்பு வாங்கி தலைல வச்சிகிட்டு நடந்த கதைதான்.


எச்சரிக்கை
கண்ணாடி பயிற்சி அதிக ஈர்ப்பு கொண்டது. இதில் பால் கவர்ச்சியும் அடக்கம் எனவே பழக்க வழக்கங்களில் அதிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.இது ஜகவசியத்தின் பலனும் கூட.இயற்கையாகவே நம் கண்ணாடியின் முன் நம்மை அழங்கரித்து கொள்வதும் கண்ணாடிப்பயிற்சியின் பலன் தரும்.எனவே அருட்கப்பியில்லாமல் தொடங்கவே முடிக்கவே கூடாது.

காளானின் மருத்துவ குணம் !!!