உயிர் காந்த மையம் Genetic Center ஆகும், இதனை கருமையம் என்றும் கொள்ளலாம். விந்து, உயிராற்றல், சீவ காந்தச் சுழல் இம்மூன்றையும் இனணத்து உடலின் மையப் பகுதியில் மூலாதாரமென்று யோகியர்கள் வழங்கிய உயிர் நிலையமே கருமையம் ஆகும். இறை நிலையும் அதன் அலையாற்றலும் இனணந்து செயல்புரியும் மனித வாழ்வின் இயற்கை நியதியாகும் இந்தக் கருமையம். இதுவே ஆன்மா என்றும், அகம் (Soul) என்றும் உயிர் நிலை என்றும் வழங்கப் படுகின்றது.
மனிதனுடைய
எண்ணம்,
சொல்,
செயல்
எனும் மூன்று வினைகளையும்
காந்த அலைகளாக மாற்றப்பட்டு
சுருக்கமாக
கருமையத்தில் இருப்பு
வைக்கப்பட்டிருக்கின்றன.
முன்
பிறவி பின்
பிறவி
இவைகளை இணைத்தும்,
உயிர்த்துகள்
மையம்,
உலகங்களின்
ஈர்ப்பு மையம்,
எல்லா
உயிர்களின் கருமையம் இவற்றோடு
இறைவெளி மூலம் ஒவ்வொருவருடைய
கருமைய
மும்
ஒன்றிணைக்கப்பட்டிருக்கிறது.
வினைப்
பதிவுகளுக்கேற்ப விளைவுகளை
தவறு
இன்றி
அளித்துவரும் பேரியக்க மண்டல
கணிப்பொறி (Universal
Computer) ஆக
விளங்கும்
திருவருள் நீதி மன்றமே
சீவகாந்தக் கருமையம்.
– வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment